குத்தாலம் கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூராக நின்றதாக கூறி கல்லூரி மாணவரின் செல்போனை பிடிங்கி சென்ற காவல் ஆய்வாளரை நிலையம் சென்று மாணவரின் தந்தை அடித்ததால் தந்தை மற்றும் மகனுக்கு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கல்லூரி மாணவர்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதிராமன். இவர் குத்தாலம் கடைவீதியில் காவல் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கிஷோர் கல்லூரி மாணவன் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. 


கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' என பாராட்டப்பட்டவர் அண்ணன் திருமாவளவன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கண்டித்த காவல் ஆய்வாளர் 


காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்திற்கு வழி தறாமல், செல்போனில் கிஷோர் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கிஷோரை காவல் ஆய்வாளர் ஜோதிராமன்  கண்டித்துள்ளார். அதற்கு கிஷோர் திமிராக பேசியதால் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் கிஷோரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு காவல் நிலையம் வர சொல்லிவிட்டு சென்றுள்ளார்.


Aavani Avittam 2024: நாளை ஆவணி அவிட்டம்! அப்படி என்றால் என்ன? எப்போது வருகிறது?




காவல் ஆய்வாளரை அடித்த தந்தை


அதனைத் தொடர்ந்து குத்தாலம் காவல் நிலையத்திற்கு  கிஷோர் அவரது தந்தையுடன் வந்துள்ளார். அங்கு வந்த கிஷோரின் தந்தை கடைவீதியில் தன் மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள்?  என்று கேட்டு மகேஸ்வரன் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் காவல் ஆய்வாளர் ஜோதிராமனை மகேஸ்வரன் கன்னத்தில் அறைந்தாகவும் சொல்லப்படுகிறது. 


கலைஞர் நினைவு நாணய விழா! வாழ்த்திய பிரதமர்.. நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்


தந்தை, மகனுக்கு சிறை


இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது குத்தாலம் காவல்துறையினர் காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச்சிறையில்  அடைத்தனர். காவல் நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளரை அடித்ததாக கூறப்படும் சம்பவம் மயிலாடுதுறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Crime: நெல்லை அருகே பயங்கரம்: கோவில் கொடைவிழா தகராறில் இரட்டைக்கொலை..