விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆகஸ்ட் 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவரது 62வது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


மேலும், நேற்றைய தினம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இதனை தொடர்ந்து, இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்ற உள்ளார்.


இந்தநிலையில், திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியது.. சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்  தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை நேரில், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 




விசிக தலைவர் திருமாவளவன் பயணத்தில் உடன் நிற்பேம்-  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 


இந்நிலையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் எம்.பி. அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.


குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'மேஜர் ஜெனரல்' எனப் பாராட்டப்பட்டவர்.


திமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்புக்குரிய உடன்பிறப்பு. மேலும், சமத்துவம் - சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில் நம்மோடு கரம் கோர்த்து நிற்கும் அன்பு அண்ணன்.


பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய மானுட விடுதலைக்காக  கொள்கை உரத்தோடுக் களமாடும் அண்ணனின் பயணத்தில் எப்போதும் உடன் நிற்போம் அவரின் பணிகள் சிறக்கட்டும் என தெரிவித்து தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.