மேலும் அறிய

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழுஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்துள்ள நிலையில் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் இருந்து ஏராளமான நபர்கள் குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பல நபர்கள் ஊருக்கு திரும்ப முடியாமலும் அதே போன்று மர்மமான முறையில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கொரடாச்சேரி சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மகன் முத்துக்குமரன், வயது 40. இவர் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துக்குமரனின் பெற்றோர், மனைவி, மகன்கள், உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

மேலும் முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து முத்துக்குமரனின் மனைவி வித்யா கூறுகையில்...  “எனது கணவர் முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அதன் பின்னர் இரண்டு தடவை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது வேலை கஷ்டமாக உள்ளதாகவும் என்னை ஒட்டகம் மேய்ப்பதற்கு பாலைவனத்தில் விட்டு விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாக கூறினார் இந்த நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சாவில் மர்மம் உள்ளது.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

எனவே மத்திய மாநில அரசுகள் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரின் உடலை பத்திரமாக மீட்டு தர வேண்டும்” எனவும் கண்ணீர் மல்க அவருடைய மனைவி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கூத்தாநல்லூர் மட்டுமின்றி லட்சுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசே மத்திய அரசு வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரனை படுகொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவிக்கும் முத்துக்குமரனின் குடும்பத்திற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தக்க நிதியும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற போஸ்டரை அடித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இன்று முத்துகுமரனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூத்தாநல்லூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பாஜகவினர் கண்டன பேரணி நடத்தி கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget