(Source: ECI/ABP News/ABP Majha)
சாத்தான்குளம் கொலை வழக்கு - காயங்களுடன் சிறைக்கு வந்ததாக சிறைவாசி சாட்சியம்
’’சிறையில் தந்தை மகன் இருந்த அறையில் உடனிருந்த சிறைவாசியாக நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கருப்பாசாமி என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்’’
கும்பகோணத்தில் கனமழையால் சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளியமரம்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கின் சாட்சியான ஜெயராஜ் பென்னிக்ஸ் அடைக்கப்பட்ட கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் இருந்த அறையில் உடனிருந்த சிறைவாசியாக நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கருப்பாசாமி என்பவர் நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். தற்போது கருப்பசாமி ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் சாட்சியம் அளித்தார்.அப்போது தந்தை மகன் இருவரும் சிறைக்குள் வரும்போது உடலில் இருந்த காயங்களின் தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும், உணவு எடுத்துக்கொள்ளவில்லை எனவும் சாட்சியம் அளித்தார்.