மேலும் அறிய

அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சு அநாகரிகம்: திமுகவுக்கு ஜோதிமணி கண்டனம்!

பெண்கள் பாதுகாப்பு, கனிமவளத்துறை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு டாஸ்மாக் மூடல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - எம்.பி ஜோதிமணி

டாஸ்மாக் மூடல் கனிமவள பாதுகாப்பு சட்டம் ஒழுங்கில் தவிர்க்க அமைச்சர்கள் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்த காங்கிரசை தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் விமர்சிப்பது அநாகரிகம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கண்டிக்க வேண்டும். இந்தியா கூட்டணி குறித்து திருமாவளவன் பேசிய கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் - காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேட்டி 


அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சு அநாகரிகம்: திமுகவுக்கு ஜோதிமணி கண்டனம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் எம்.பி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டு சில கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழக அரசு பொறுப்பேற்றது முதன்முறையாக திண்டுக்கல்லில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சருடன் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, கனிமவளத்துறை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு டாஸ்மாக் மூடல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, தொடர்ந்து சிறந்த முறையில் ஆட்சி நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சு அநாகரிகம்: திமுகவுக்கு ஜோதிமணி கண்டனம்!

காங்கிரஸ் கட்சி 25 ஆண்டு காலம் திமுக கூட்டணியில் இருந்தது மைனாரிட்டி அரசாக திமுக இருந்தபோது காங்கிரஸ்தான் ஐந்து ஆண்டுகள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு கொடுத்தது. ஆனால், தற்போது கூட்டணியிலிருந்து வந்து விட்டோம் என்பதற்காக கடுமையான வார்த்தைகளை அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் பயன்படுத்துவது தவறானது அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இருபது ஆண்டுகாலம் கூட்டணியில் இருந்த காங்கிரசை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காலத்துக்கு ஏற்றவாறு சில நேரங்களில் மாற வேண்டிய சூழல் வரும் 500 ஆண்டுகள் ஒரே கூட்டணியில் இருக்க முடியாது. 

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்து சில கருத்துக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இருந்தால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வோம். மிக நீண்ட அனுபவம் கொண்ட திருமாவளவனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் அதே நேரத்தில் திமுக போன்று கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 


அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சு அநாகரிகம்: திமுகவுக்கு ஜோதிமணி கண்டனம்!

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட வேண்டி இருக்கிறது. ஒருமித்த குரலில் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும் இந்தியா முழுமைக்கும் தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். மூன்று முறை பிரதமர்களை தந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் சென்றிருப்பதை கவனிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பார்க்க கூடாது. கேரளாவில் எதிர் துருவங்களாக இருந்தாலும் இன்று தமிழகத்தில் ஒரே மேடையில் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் கட்சி பயணித்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் சிறந்த அரசியல் திமுகவைப் போல கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget