மேலும் அறிய

பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடா்பான அம்சங்கள் குறித்து விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது

​​​திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து நில அபகரிப்பு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.


பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி (CBCID) போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், முறைகேடாக நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் நில மோசடிக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ​இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மோசடிப் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த மேலும் முக்கியப் புள்ளிகள் சிக்கியுள்ளனர். பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி, தற்போது பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள சிவசங்கரி என்ற பெண்ணை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். 

இந்த  நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக விற்பனை செய்த வழக்கில், 90 நாள்களுக்குள் 5 போ் மீது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா். இதுகுறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.35 ஏக்கா் நிலத்தை மோசடியாக விற்பனை செய்து பதிவு செய்ததாக, திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில், கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்படி நிா்ணயிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பழனி நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

1888-இல் தா்ம சாசனம் மூலம் மடத்தின் சமய மற்றும் அறப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சுமாா் ரூ.16 கோடி. ஆனால், நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பத்திரம் தயாரிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் 160-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினா். மேலும், பதிவுத்துறை, வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தனா்.

இதன் அடிப்படையில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயப்பிரகாஷ் ஆகிய 5 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட அன்வா்தீன் கடந்த ஆக. 7-ஆம் தேதி உயிரிழந்ததால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடா்பான அம்சங்கள் குறித்து விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பழனி கோயில் பிரசாதம்: நவம்பர் 1 முதல் புதிய விலை! பக்தர்களே தெரிந்துகொள்ளுங்கள்..
பழனி கோயில் பிரசாதம்: நவம்பர் 1 முதல் புதிய விலை! பக்தர்களே தெரிந்துகொள்ளுங்கள்..
தேக்கம்பட்டி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிய சம்பவம்! தேனியில் போலீசார் தீவிர வேட்டை! 15 பேர் கைது!
தேக்கம்பட்டி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிய சம்பவம்! தேனியில் போலீசார் தீவிர வேட்டை! 15 பேர் கைது!
மேலூர் தூய்மை பணியாளர் உணவில் புழு: சுகாதார சீர்கேட்டால் 4 பேர் மருத்துவமனையில்!
மேலூர் தூய்மை பணியாளர் உணவில் புழு: சுகாதார சீர்கேட்டால் 4 பேர் மருத்துவமனையில்!
மதுரை சிறுவன் மரணம்: விளையாட்டில் விபரீதம்; மகனைக் காப்பாற்ற தடயத்தை அழித்த தாய் கைது!
மதுரை சிறுவன் மரணம்: விளையாட்டில் விபரீதம்; மகனைக் காப்பாற்ற தடயத்தை அழித்த தாய் கைது!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Embed widget