பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆய்வாளர் மீது எழுந்த விவகாரத்தில் ஆய்வாளர் வீரகாந்தியை  நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


IND vs AUS, LIVE Score: வார்னரை காலி செய்த ஷமி.. 2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..!


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இங்குள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர்  வீரகாந்தி. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்‌ மாதம் கீரனூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, காவல் ஆய்வாளர் வீரகாந்தி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வீரகாந்தி மீது 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Indonesia Earthquake: மீண்டும் நிலநடுக்கம்.. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழப்பு..


இதனைத்தொடர்ந்து அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பியாக பணிபுரிந்த லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி, பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை துவங்கியது. இதில் புகார் கொடுத்த பெண், காவல்நிலையத்தில் பணிபுரிந்த சக போலீசார் மற்றும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


Caste Violence : எங்க நிலத்துல மாட்டை மேய்ப்பியா? பட்டியலின பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ


இந்நிலையில் பெண் காவலர் கொடுத்த ஆதாரம், காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் செல்போன் உரையாடல் மற்றும் குறுந்தகவல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையிலான விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் வீரகாந்தியின் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான அறிக்கையை விசாகா கமிட்டி அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டு உறுதி என விசாகா கமிட்டியின் அறிக்கை தெரிவித்துள்ளதன் அடிப்படையில்,  காவல் ஆய்வாளர் வீரகாந்தியை  பணியில் இருந்து நிரந்தரமாக விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி.அபிநவ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Erode East By Election 2023: "சூப்பர் முதலமைச்சர் அல்ல வெறும் பொம்மைதான்".. முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி


நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்துவரும் நிலையில், காவல் ஆய்வாளர் வீரகாந்தியை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண