இந்தோனேசியாவின் ஜெயபுரா நகருக்கு அருகே தென்மேற்கு கடலுக்கு அடியில் 22 கி.மீ ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.






இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு உணவகம் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர். 






ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது?


இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்டமாகும், இங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்க சம்பவங்கள் நடைபெறும். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த இடம், பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள நில அதிர்வு தவறுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அமைந்துள்ளது. அதன் இருப்பிடம் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


முன்பு வந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்


இதற்கு முன்னர், நவம்பர் 21 அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டதற்குப் பிறகு இந்தோனேசியாவில் இது மிகவும் உயிரிழப்பாக கருதப்பட்டது. அதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமியைத் வரவழைத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இது ஒரு டஜன் நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Guava Leaves Tea : கொய்யா இலை டீ கேள்விப்பட்டிருக்கீங்களா? இதில் இவ்வளவு நன்மைகளா?