புகாருக்கு வழக்குப்பதிவு செய்யாததால் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த  புகாருக்கு வழக்குப்பதிவு செய்யாததால் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு.

Continues below advertisement

அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த  புகாருக்கு வழக்குப்பதிவு செய்யாததால் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த கொடைரோடு அருகே உள்ள குல்லலகுண்டு ஊராட்சி கன்னிமா நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சதீஷ்கண்ணன் (23) என்பவர்,  பள்ளப்பட்டி சிப்காட்டில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு  சொந்தமான தோட்டத்திற்கு, இவர், கடந்த 13.4.2022 அன்று  சென்றார்.

PM Modi In Rajya Sabha : ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி..!

அப்போது  பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு மற்றும் சிலர் பாண்டி என்பவருக்கு சொந்தமான  நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு, பேசி உன்னை  பொய் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடுவோம்,  உன்னையும் உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என,  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

IND VS AUS 1ST TEST: முதல் நாளிலேயே சுருண்ட ஆஸ்திரேலியா.. பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி

இதுகுறித்து,  அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்தார்.  இதில், சம்பந்தப்பட்ட நபரின் புகார் மீது  விசாரணை செய்ய நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம்  உத்தரவிட்டது.


ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாததால், ஆத்திரமடைந்த  சதீஸ்கண்ணனின் தந்தை, விவசாயி பாண்டி (50) என்பவர், கடந்த 7-ம் தேதி இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று, அங்கு தான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காத, காவல்துறையினரை கண்டித்து, காவல்  நிலைய வாசலில் தான் மறைத்து வைத்து இருந்த விஷத்தை  எடுத்து குடித்தார்.

Watch Video: "ஏய்.. எப்புட்றா.." ஜடேஜா சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்த ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சி..!

உடனே விவசாயி  பாண்டியை,  நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விவசாயி பாண்டி என்பவர் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், விவசாயி பாண்டி விஷம் குடித்த அன்று, மேற்படி பாண்டி கொடுத்த  புகாருக்கு, 3 பேர் உட்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  


விவசாயி பாண்டி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். காவல் நிலைய முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில்  பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement