IND vs AUS, LIVE Score: இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் அறிய ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

முகேஷ் Last Updated: 11 Feb 2023 02:53 PM
IND vs AUS, LIVE Score: மேன் ஆஃப் த மேட்ச் வென்ற ஜடேஜா..!

இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளும், 70 ரன்களும் எடுத்த ரவீந்திர ஜடேஜாவுக்கு மேன் ஆஃப்த மேட்ச் வழங்கப்பட்டுள்ளது. 

IND vs AUS, LIVE Score: ஒரு சிக்ஸர் மட்டும் அடித்த ஆஸி..!

முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்ஸில் களமிறங்கி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித மட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸர் அடித்துள்ளார். 

IND vs AUS, LIVE Score: ஜடேஜாவுக்கு 25% அபராதம்..!

ஐசிசி விதிகளை மீறி கள நடுவரிடம் கூறாமல் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 25% சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

IND vs AUS, LIVE Score: அரைசதம் அடிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள்..!

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் செய்தும், ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் ஸ்மித் 49 ரன்கள் அடித்து இருந்தார். 

IND vs AUS, LIVE Score: 7 விக்கெட்டுகள் வீழ்த்திய மர்ஃபி..!

ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் மர்ஃபி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இதற்கு முன்னர் வேறு எந்த ஆஸ்திரேலிய வீரரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். 

IND vs AUS, LIVE Score: ஜடேஜா 7 விக்கெட்டுகள்..!

இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஸ்வின் 8 விக்கெட்..!

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 

5 விக்கெட் வீழ்த்திய அஸ்வின்..!

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு முக்கிய காரணமாகும்.  

முதல் டெஸ்ட்டை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை..!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்ன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

IND vs AUS, LIVE Score: ஸ்மித் போல்ட்; ஆனால் அவுட்டில்லை; காரணம் இதுதான்..!

இரண்டாவது இன்னிங்ஸின் 32 ஓவரினை ஜடேஜா வீச, அந்த பந்தில் ஸ்மித் போல்டானார். ஆனால் ரிவ்யூவில் அந்த பந்து நோபால் என தெரியவந்துள்ளது.  

IND vs AUS, LIVE Score: 9வது விக்கெட்; பறந்தது ஸ்டெம்ப்; நாதன் லைன் அவுட். 

ஸ்மித்துக்கு கம்பெனி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நாதன் லைன் முகமது ஷமி பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். 

IND vs AUS, LIVE Score: 7வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி - முடிவுக்கு வரும் முதல் டெஸ்ட்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 7வது விக்கெட்டை இழந்தது - அந்த அணி 23 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் 

IND vs AUS, LIVE Score: 5வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி - இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம் - 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் 

IND vs AUS, LIVE Score: 3வது விக்கெட்டும் பறிபோனது.. இந்திய சுழற்பந்துவீச்சில் மிரளும் ஆஸ்திரேலிய அணியினர்..!

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 3வது விக்கெட்டை இழந்தது. டேவிட் வார்னர் 10 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

IND vs AUS, LIVE Score:மீண்டும் ஜடேஜாவின் சுழல் மாயம்.. வெளியேறினார் லாபுசேனே..!

28 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த லாபுசேனேவை ரவீந்திர ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். 

மீண்டும் அடிசறுக்கல்.. முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா...!

அஷ்வின் வீசிய 2வது ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்த கவாஜா, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

400 ரன்களில் ஆல் - அவுட் ஆன இந்திய அணி.. சதம் அடிக்க தவறிய அக்ஸர் பட்டேல்...!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 400 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. 

400 ரன்களை கடந்த இந்திய அணி.. சதம் அடிக்க காத்திருக்கும் அக்ஸர் பட்டேல்...!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. அக்ஸர் பட்டேல் 84 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

வேகமாக சுழன்ற டர்பி பந்து.. சறுக்கிய ஷமி விக்கெட்.. 9வது விக்கெட்டை இழந்த இந்தியா..!

47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த முகமது ஷமி டர்பி பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியிடம் கேட்சானார். 

முதல் இன்னிங்ஸில் 200 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி..!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 200 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் அக்ஸர் படேல் மற்றும் ஷமி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட அக்ஸர்.. 400 -ஐ நெருங்கும் இந்திய அணி..!

டாட் மர்பி வீசிய 131 வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அக்ஸர் பட்டேல் கலக்கி வருகிறார். 

70 ரன்களில் வெளியேறிய ஜடேஜா.. 8வது விக்கெட்டை இழந்த இந்தியா..!

185 பந்துகள் விளையாடி 70 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, டாட் மர்பி வீசிய 119 ஓவரில் க்ளீன் போல்டானார். 

முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் முன்னிலை பெற்றது - இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் நிதான ஆட்டம்

IND vs AUS, LIVE Score: தொடங்கியது 3 ஆம் நாள் ஆட்டம் - சதமடிப்பாரா ரவீந்திர ஜடேஜா?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது - இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

ஜடேஜா, அக்‌ஷர் அபாரம்..! 144 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா

நாக்பூரில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

அரைசதம் கடந்த அக்‌ஷர் பட்டேல்..!

சிறப்பாக விளையாடி வரும் அக்‌ஷர் பட்டேல் 96 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அரைசதம் விளாசியுள்ளார். 

300 ரன்களைக் கடந்த இந்தியா..!

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 

105 ரன்கள் முன்னிலை..!

இந்திய அணி தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

நங்கூரமிடும் ஜடேஜா - அக்‌ஷர் படேல் கூட்டணி..! ரன்கள் குவிப்பார்களா?

இந்திய அணிக்காக ஜடேஜா, அக்‌ஷர் படேல் கூட்டணி நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடி வருகின்றனர். 

ஜடேஜா அரைசதம்..!

களமிறங்கியதில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா தற்போது, 116 பந்துகளில் 7 பவுண்டரி விளாசி, 50 ரன்களை எடுத்துள்ளார். 

250 ரன்களை எட்டிய இந்திய அணி..!

இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை எட்டியுள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜாவும், அக்‌ஷர் பட்டேலும் உள்ளனர். 

மார்ஃபி 5 விக்கெட்டுகள்..!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மார்ஃபி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

7வது விக்கெட்டை இழந்த இந்தியா..!

மார்பி பந்துவீச்சில் இந்திய அணியின் ஷிகர் பாரத் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். 

120 ரன்களில் அவுட்டாகிய ரோகித்சர்மா - ஆஸ்திரேலிய பவுலர்கள் நிம்மதி

இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி சதமடித்த கேப்டன் ரோகித்சர்மா 120 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

200 ரன்களை கடந்தது இந்திய அணி

200 ரன்களை கடந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 24 ரன்களை முன்னிலை பெற்றுள்ளது.

முன்னிலை பெற்றது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி  64 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை சேர்த்துள்ளது.

ரோகித் சர்மா அபார சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தார். 171 பந்துகளில் அவர் அடித்த சதத்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்

சூர்யகுமார் யாதவ் அவுட்...

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் எடுத்து இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் அவுட்டானர். நாதன் லயன் பந்துவீச்சில் அவர் போல்ட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கோலி அவுட்

உணவு இடைவேளைக்குப் பின் வீசப்பட்ட முதல் ஓவரின் முதல் பந்திலேயே, 12 ரன்கள் எடுத்திருந்த கோலி கேட்ச் முறையில் அவுட்டானார். ராகுல், அஸ்வின் மற்றும் புஜாராவை தொடர்ந்து கோலியின் விக்கெட்டையும் மர்பி வீழ்த்தினார்

கோலி அவுட்

உணவு இடைவேளைக்குப் பின் வீசப்பட்ட முதல் ஓவரின் முதல் பந்திலேயே, 12 ரன்கள் எடுத்திருந்த கோலி கேட்ச் முறையில் அவுட்டானார். ராகுல், அஸ்வின் மற்றும் புஜாராவை தொடர்ந்து கோலியின் விக்கெட்டையும் மர்பி வீழ்த்தினார்

உணவு இடைவேளையில் இந்திய அணியின் நிலை..

இரண்டாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 85 ரன்களுடனும், கோலி 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி...

முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, தற்போது 45 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் மர்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மர்பி சுழலில் சிக்கி புஜாரா அவுட்

இளம் பந்துவீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, கேட்ச் முறையில் 7 ரன்களுக்கு புஜாரா அவுட்டானார்.

அசத்தும் இளம் வீரர் மர்பி..

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த அறிமுக வீரரான சுழற்பந்து வீச்சாளர் மர்பி, தனது முதல் போட்டியிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மேலும் ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி

அஸ்வின் 23 ரன்கள் எடுத்து இருந்த போது, மர்பி பந்து வீச்சில் எல்பிடபள்யூ முறையில் அவுட்டானார்.

இந்திய அணி நிதான ஆட்டம்...

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன்களை சேர்த்துள்ளது. ரோகித் - அஸ்வின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

100 ரன்களை கடந்த இந்தியா.. சதத்தை நோக்கி ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 100 ரன்களை கடந்துள்ளது. ரோகித் சர்மா 67 ரன்களுடனும், அஸ்வின் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

77 ரன்களுக்கு 1 விக்கெட்..! தரமான சம்பவங்களுடன் முதல் நாளை நிறைவு செய்த இந்தியா..!

இந்திய அணி 77 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்றுள்ளது. 

தட்டுத் தடுமாறிய பேட்டிங்..! 20 ரன்களில் அவுட்டான கே.எல்.ராகுல்..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் 20 ரன்களில் முர்பி பந்தில் ஆட்டமிழந்தார். 

அதிரடி காட்டும் ரோகித்சர்மா..! அரைசதம் விளாசுவாரா?

இந்திய அணிக்காக முதல் இன்னிங்சை அதிரடியாக ஆடி வரும் ரோகித்சர்மாவை அவுட்டாக்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். 

சுழற்பந்துவீச்சு தாக்குதலை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி...! கைகொடுக்குமா?

இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கியுள்ளது. 

ரோகித் - கே.எல்.ராகுல் நிதான தொடக்கம்

ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணியின் முதல் இன்னிங்சை தொடங்கிய ரோகித்சர்மா - கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி வருகின்றனர். 

மிரட்டல் பந்துவீச்சு.. 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய ஆஸ்திரேலியா..!

இந்தியாவிற்கு முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா..!

ஜடேஜா, அஸ்வின் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. 60 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 174 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை தூக்கிய ஜடேஜா.. 4 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..!

சிறப்பாக பந்துவீசி ஜடேஜா, லாபுஷாக்னே மற்றும் மாட் ரென்ஷா ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். 

உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா அணி 76/2... போராடும் ஸ்மித், லாபுஷாக்னே..!

நாக்பூரில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியா vs இந்தியா, நாள் 1: AUS (முதல் இன்னிங்ஸ்) - 75/2 ரன்கள் (30 ஓவர்கள்)

30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. 

40 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா.. நிலைத்து நிற்கும் ஸ்மித், லாபுஷாக்னே..!

2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறிய நிலையில், ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இணைந்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். 

ஆஸ்திரேலியா vs இந்தியா, நாள் 1: AUS (முதல் இன்னிங்ஸ்) - 29/2 ரன்கள் (13.4 ஓவர்கள்)

13.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs AUS, LIVE Score: வார்னரை காலி செய்த ஷமி.. 2 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா..!

ஷமி வீசிய 3வது ஓவரில் 5 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த வார்னர் கீளீன் போல்டாகி வெளியேறினார். 

IND vs AUS, LIVE Score: முதல் பாலே.. முதல் விக்கெட்.. தட்டித்தூக்கிய முகமது சிராஜ்..!

முகமது சிராஜ் 2 வது ஓவரில் முதல் பந்தை வீசி உஸ்மான் கவாஜாவை 1 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். 

IND vs AUS, LIVE Score: டெஸ்டில் சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் அறிமுகம்..!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் அறிமுகமாகியுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆஸ்திரேலிய அணி விவரம்: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், டாட் மர்பி, நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

இந்தியா அணி விவரம்:

இந்தியா அணி விவரம்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்

IND vs AUS, LIVE Score: பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா.. பௌலிங்கில் அசத்துமா இந்தியா..?

இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Background

பார்டர் கவாஸ்கர் தொடர்


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான கடைசி 3 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.


தடுமாறிய ஆஸ்திரேலியா


டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர், இந்திய அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதேபோன்று, ஆஸ்திரேலிய அணிக்காக மார்பி எனும் இளம் சுழற்பந்துவீச்சாளரும் அறிமுகமானார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றம் கண்டது. தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் கவாஜா தலா ஒரு ரன்னுடன் நடையை கட்டினர்.


ஆஸ்திரேலியா ஆல்-அவுட்


நிதானமாக விளையாடிய லபுசக்னே மட்டும் அதிகபட்சமாக 49 ரன்களை சேர்க்க, ஸ்மித் 37 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும், ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி  63.5 ஓவர்களில்177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனிடையே, இன்றைய போட்டியில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.


இந்திய அணி பேட்டிங்:


அதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் மற்றும் துணை கேப்டன் கே.எல். ராகுல் ஆகியோர்  சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 71 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோகித் டெஸ்ட் போட்டிகளில் தனது 15வது அரைசத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து போட்டியின் முதல் நாள் முடிவில், 24 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 77 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மார்பி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் இந்தியா 100 ரன்கள் பின்தங்கிய நிலையில்,  ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.