மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய கட்டுப்பாடு: டிக்கெட் கிடைப்பது இனி கஷ்டம்

குறிப்பிட்ட நேரத்தில் 1,200 முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலாகும்

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்துக்கே முன்னுரிமை அளித்து வருகிறார்கள். இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய கட்டுப்பாடு: டிக்கெட் கிடைப்பது இனி கஷ்டம்

சமீபகாலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தட்கல் முன்பதிவுக்கு புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது. அதன்படி, ஜூலை 1 முதல் ஆதார் எண் இணைக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ரயில்வே முன்பதிவு அலுவலகங்களிலும் ஆதார் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்ட பின்னரே முன்பதிவு செய்யப்படுகிறது.இந்த நிலையில், தற்போது முன்பதிவில்லா பெட்டிகளில் அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது.

90 முதல் 100 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் உள்ள முன்பதிவுப் பெட்டிகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக தில்லி ரயில் நிலையத்தில் கூடிய பயணிகளிடையே கூட்டநெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு, அளவுக்கு அதிகமான பயணிகளுக்கு முன்பதிவில்லா டிக்கெட் வழங்கியதே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! முன்பதிவில்லா பெட்டிகளில் புதிய கட்டுப்பாடு: டிக்கெட் கிடைப்பது இனி கஷ்டம்

இந்த நிலையில், தொலைதூர ரயில்களில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. தற்போது முதல்கட்டமாக தில்லி ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் வீதம் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. எடுத்துகாட்டாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு குறிப்பிட்ட நேரத்தில் 2 ரயில்கள் புறப்படும் பட்சத்தில், இரண்டு ரயில்களிலும் தலா 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் 1,200 முன்பதிவில்லா டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமராவதி அணை: கரூர், திருப்பூர் குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
Madurai Hc ; முன்னுரிமை பிரிவுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையை விசாரிக்க தனி குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !
கீழடி அகழாய்வில் மீன் உருவம் பொறித்த அரிய பானை - சங்க கால ரகசியம் வெளிச்சத்திற்கு !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget