மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம் ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்பணம் செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் இருக்கும் நிலையில் நீர்நிலைகளில் கூடி தர்பணம் செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது. 


கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலன் அடித்து கொலை - கணவன் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்



Local Body Polls First Phase LIVE: உள்ளாட்சித் தேர்தல் - 1 மணி நேர நிலவரப்படி 33.78% வாக்குப்பதிவு


இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி பேரணை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பரிகாரஸ்தலமான ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மஹாளய அமாவாசையை யொட்டி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆலயம் மூடப்பட்டிருந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வைகை ஆற்றில் புனித நீராடி பின்னர் கோவிலுக்கு வெளியே மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். வாகனங்களில் வரும் பொதுமக்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்ட போதிலும், அதனையும் மீறி ஏராளமான பொதுமக்கள்  வைகை ஆற்றில் புனித நீராட  குவிந்தனர். 



ஒரே நாடு.. ஒரே ரயில்வே தேர்வு - இந்தியை திணிக்கும் முயற்சியா? வலுக்கும் கண்டனங்கள்!


அதே போல் தேனி மாவட்டம் கம்பம அருகே பிரசித்திபெற்ற புண்ணிய தலமாகவும் சுற்றுலா தலமாகவும்  விளங்கும் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பூத நாராயணன் கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அருவியில் குளிக்க பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாற்றில் குளித்து பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.


தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்