கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனபள்ளி கீழ் பூங்குருதியை சேர்ந்த பாரதிக்கும் (25), பர்கூரை சேர்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி கதிரேசனுக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குகசிம்மன் என்ற 5 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது உறவினரான ரகுபதி என்பவருடன் பாரதிக்கு பழக்கம் ஏற்பட்டு ஓசூர் பாராண்ட பள்ளியில் ரகுபதியுடன் ஒன்றாக இணைந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பருகூர் காவல் நிலையம் அருகில் ஊர் முக்கிய நபர்கள் சுமார் 20 நபர்கள் இவர்களுடைய கள்ள தொடர்பை பேச்சு வார்த்தை நடத்தியதில் முடிவு எட்டப்பட வில்லை. இதனால் பர்கூரில் இருந்து ஓசூர் பரண்டபள்ளி செல்வதற்காக நான்கு சக்கர ஆட்டோவில் 7 பேர் சென்று கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பையணப் பள்ளியில் தனியார் ஹோட்டல் முன் பாரதியின் கணவர் கதிரேசன் அவரது சகோதரர்கள் கேசவன், பாண்டுரங்கன் மற்றும் சித்தப்பா மகன் சதீஷ் ஆகியோர்கள் 2 இருசக்கர வாகனத்தில் வந்து. வாகனத்தை வழிமறித்து இரும்பு பைப்பால் வாகனத்தின் முன்புற கண்ணாடியை உடைத்தும் மற்றும் ரகுபதியின் தலையில் இடது பக்கம் தாக்கியதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரகுபதி உயிரிழந்தார்.
மேலும் ரகுபதியின் தாய்மாமன் சின்ன திம்மராயன் (45) என்பவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் படுகாயம் அடைந்த திம்மராயன் மீட்டு சிகிச்சைகாக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மனுத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ரகுபதியின் சடலத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் கள்ளக்காதலை தனது மனைவி கைவிடாததால் ஆத்திரம் அடைந்த கதிரேசன், தனது சகோதரர்கள் உதவியுடன் மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் தேடி வந்த கேசவனை கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கதிரேசன், சதீஷ், பாண்டுரங்கன் ஆகிய 3 நபர்களும் திருப்பத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு உத்தரவுப்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தியாவில் மருத்துவப் படிப்பு வியாபாரமாகிவிட்டது.. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?