Local Body Polls First Phase LIVE: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
லக்கிம்பூர் வன்முறை - தானே விசாரணைக்கு எடுத்தது உச்சநீதிமன்றம் - நாளை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது
உள்ளாட்சித் தேர்தலில் 1 மணி நேர நிலவரப்படி 33.78% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்
முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணிவரை 19.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்ட முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 7.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார். 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் எண்ணப்பட உள்ளதாகவும் கூறினார்.
காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி பகுதியில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர்.
ஒரே ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் உள்ள நிலையில் அம்முண்டி ஊராட்சியை பட்டியலின பெண் உறுப்பினருக்கு ஒதுக்கியதை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் யாரும் இதுவரை வாக்களிக்க வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது யாருமில்லை.
தலைவர் பதவிக்கு ஏணி சின்னத்தில் லஷ்மி என்பவர் போட்டியிடுகிறார். ஆனால் லட்சுமி என்பதற்கு பதிலாக தனலஷ்மி என்று வேட்பாளர் தகவல் பலகையில் பெயர் தவறுதலாக குறிப்பிடப் பட்டுள்ளதால், வாக்குபதிவு நிறுத்தம்
காஞ்சிபுரம் மாவட்டம் : உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம். அதில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக குழப்பம் நேர்ந்துள்ளதாகத் தகவல்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 1577 ஊராட்சித் தலைவர், 12,252 ஊராட்சி உறுப்பினர் பணியிடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது
விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்கள் வாரியான வாக்காளர்கள் குறித்த விபரம் இதோ:
ஊராட்சி ஒன்றியங்கள் | |
செஞ்சி | காணை |
கண்டமங்கலம் | கோலியனூர் |
முகையூர் | மயிலம் |
ஒலக்கூர் | மரக்காணம் |
திருவெண்ணெய்நெல்லூர் | மேல்மலையனூர் |
வானூர்
| வல்லம் |
விக்கிரவாண்டி |
|
தொகுதி | ஆண் வாக்காளர் | பெண் வாக்காளர் | இதர வாக்காளர் |
செஞ்சி | 1,28,545 | 1,31,577 | 37 |
மயிலம் | 1,09,755 | 1,10,088 | 25 |
திண்டிவனம்(தனி) | 1,13,322 | 1,16,577 | 13 |
வானூர்(தனி) | 1,10,930 | 1,14,767 | 16 |
விழுப்புரம் | 1,27,445 | 1,33,463 | 62 |
விக்கிரவாண்டி | 1,15,608 | 1,18,268 | 25 |
திருக்கோவிலூர் | 1,27,601 | 1,26,342 | 38 |
மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:
மாவட்டம் | மொத்தம் | ஆண்கள் | பெண்கள் | இதர |
விழுப்புரம் | 1383687 | 6,87,420 | 6,96,115 | 152 |
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதோ அதன் விபரம்:
முதல் கட்ட தேர்தல் |
செஞ்சி |
கண்டமங்கலம் |
முகையூர் |
ஒலக்கூர் |
திருவெண்ணெய்நெல்லூர் |
வானூர் |
விக்கிரவாண்டி |
இரண்டாம் கட்ட தேர்தல் |
காணை |
கோலியனூர் |
மயிலம் |
மரக்காணம் |
மேல்மலையனூர் |
வல்லம் |
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று (இன்று) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (94441 52829), காஞ்சிபுரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023)ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழிலாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419), தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்
Background
TN Local Body Polls First Phase LIVE:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கென மொத்தம் 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 17 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -