1.திண்டுக்கல் அடுத்த அம்பாத்துறையில் மினிவேனில் ஆயிரம் கிலோ குட்காவை கடத்திய 2 பேரை போலீசார் கைது.
2. மதுரை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் சில இடங்களில் கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலையில் உள்ளது.
3. விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் முன்ஜாமின் கோரி, மனுத்தாக்கல் செய்த நிலையில் கூடுதலாக ஆள்கடத்தல் வழக்கையும் சேர்த்ததால், முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார்.
4. ஏலக்காய் விலையானது கிலோ 992 ரூபாய்யாக குறைந்துள்ளதால் தேனி மாவட்டம் கம்பம் பகுதி விவசாயிகள் கவலை
5.ராமநாதபுரத்தில் காரில் கடத்திய 4.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட 5 பேரை கைது செய்தார்
6. வேடசந்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வேன் கவிழ்ந்த நிலையில் கடத்தல் தொடர்பாக போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள சர்ச் கட்டத்தை திறக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை.
8. தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இந்தாண்டுக்கான விற்பனை மாட்டுதாவணிக்கு மாற்றம்
9. மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை 15 நாட்களில் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.
10. மதுரை மாநகராட்சி மண்டல-1 அலுவலகத்தில் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் 187 மனுக்கள் பெறப்பட்டன.