கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழங்கால எடைக்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம்  கீழடி, கொந்தகை, அகரம், ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வுப் பணியின் போது பல்வேறு பழங்கால பொருட்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் படிக்கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 




 

இந்த எடைக்கல் பளபளப்பான மேற்பரப்புடன் கூடியது, சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச்சில்லுகளும் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.  175 செ.மீ. ஆழத்தில் பழங்கால எடைக்கல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவ்வெடைக்கல் சற்று கோள வடிவில், மேற்பகுதி மற்றும் அடி பகுதி தட்டையாக்கப்பட்டு, மேற்பரப்புடன் ஒளிபுகும் தன்மையுடன் காணப்படுகிறது. இக்கல் 2 செ.மீ.விட்டம், 1.5 செ.மீ. உயரம் மற்றும் 8 கிராம் எனட கொண்டுள்ளது.

 





அதே போல் அகழாய்வுக் குழியில் 190 செ.மீ. ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது. உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பினது கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது.

 




 

மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ. நீளம் 5.4 செ.மீ. அகலம் 1.5 செ.மீ. தடிமன் கொண்டுள்ளது. இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு - சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 


 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண