ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி தொழிலாளி இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, சந்திரபாபு மற்றும் 20 பேர் மீது 120பி,147,148,153,307,115,109,323,324,506 ஆர்/டபிள்யூ 149 ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ் அன்னமய்யா மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் 70 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு உள்பட 20- க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவர் கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில்  சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ-வில் பங்கேற்றார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற காவல்துறையினரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு,காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை வன்முறை செய்யும் விதமாக தூண்டியதற்காக சந்திரபாபு,  முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமா உள்பட 20 க்கும் மேற்ப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசன் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு வருகிறார்.


சில நாட்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயம்டைந்தனர். மேலும், காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.


அதுபோல சித்தூர் மாவட்ட புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அங்கல்லு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உமாபதி ரெட்டி என்பவா் அளித்த புகாரில், முடிவீடு பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120 பி, 147, 153, 307, 115, 109, 323, 324, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயா் சோ்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கங்காதர ராவ் தெரிவித்தாா்.  தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவா்கள் தேவினேனி உமா, அமரநாத ரெட்டி, ராம்கோபால் ரெட்டி உள்ளிட்டோா் பெயா்களும் இடம்பெற்றுள்ளதாக அவா் தெரிவித்தாா்.