காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பருவ மழை மாற்றம் மற்றும் காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் பிரச்சனையின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்காண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 


திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் - விவசாயிகள் வேதனை

 

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர். முத்துப்பேட்டை. திருத்துறைப்பூண்டி. பெருகவளந்தான்.திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் 60,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பிலும் நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாண்டவையாரு, முல்லைஆறு, மறைக்காகோரையாறு, பாமணி ஆறு, முடிகொண்டனாரு உள்ளிட்ட ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 50 நாட்கள் ஆன நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை வசதியான விவசாயிகள் மற்றும் இன்ஜின் வைத்து இரைத்து பயிர்களை காப்பாற்றி வருவதாகவும் ஏழ்மையான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



 

இதனால் நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதாகவும் முறை வைக்காமல் ஆற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்த நெல் சாகுபடியும் கருகி அழிந்து விடும் நிலை உருவாகிவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆகவே தமிழக அரசு விவசாயிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண