மேலும் அறிய

அடேங்கப்பா... தங்கத்தினை தாண்டிய மல்லிகை; மதுரை மல்லி ஒரு கிலோ 5,500க்கு விற்பனை..!

மதுரை உசிலம்பட்டியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை உசிலம்பட்டியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிகை பூவுக்கு பெயர் பெற்ற இடமே மதுரை தான். மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூபாய் 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால் தேனி மாவட்ட ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்பிறை முகூர்த்தத்தில் வரக்கூடிய கடைசி முகூர்த்தம் என்பதால் மக்களிடையே மல்லிகைப் பூவுக்கான தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மல்லிகைப் பூ 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகாமரம் கிலோ ரூபாய் 1,500க்கும், முல்லைப் பூ கிலோ ரூபாய் 1,400க்கும், ஜாதிப் பூ கிலோ ரூபாய் 1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதேபோல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்து கொண்டே வருவதாலும், மக்களின் தேவை அதிகரிப்பதாலும், இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் மதுரையில், ஒரு கிலோ மதுரை மல்லி ரூபாய் 3 ஆயிரத்தில் இருந்து 3,500க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ மல்லிகைப் பூ  ரூபாய் 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் ஒரு கிலோ முல்லைப் பூ ரூபாய் 1,500க்கும், மாலை கட்ட பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ சம்மங்கி  பூ கிலோ ரூபாய் 300க்கும், செண்டு மல்லிப்பூ கிலோ ரூபாய் 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பட்டன் ரோஸ் கிலோ ரூபாய் 250க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

பூ வாங்க மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள் ’பூவுக்கு மட்டும் விலையச் சொல்லுங்க, உங்க கடைக்கு யாரு விலைய கேட்டாங்க’ எனவும், ’பூவுக்கு விலையக் கேட்டா தங்கத்து விலைய சொல்லீட்டு இருக்கீங்க என்றும் கூறி வேறு வழியே இல்லாமல் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து ஒரு கிலோ மல்லிகைப் பூவை வாங்கிச் செல்லுகின்றனர். 

தங்கத்தினை தாண்டிய  மல்லிகை

தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூபாய்  40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,016க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைக்கு ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து  ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4 குறைந்து  ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344  ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,418  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ரூ. 70.60 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71,600ஆக விற்பனையாகிறது. சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,160 ஆகவும்  தங்கம் கிராமுக்கு  ரூ.5,020 ஆகவும் விற்பனையானது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
iPhone 16 Discount: ஐஃபோன் பிரியரா நீங்க.? சான்ஸ விட்டுடாதீங்க.. iPhone 16-ல ரூ.9,901 அதிரடி தள்ளுபடி - எங்க தெரியுமா.?
ஐஃபோன் பிரியரா நீங்க.? சான்ஸ விட்டுடாதீங்க.. iPhone 16-ல ரூ.9,901 அதிரடி தள்ளுபடி - எங்க தெரியுமா.?
Embed widget