மேலும் அறிய

புதிய தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி?

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தொழிற்கடன் பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் - தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வங்கிகளில் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்கள் தங்களது தொழில்களை முன்னேற்றத்தில் கொண்டு செல்ல பல்வேறு வழிமுறைகளை மத்திய,மாநில அரசுகள் சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.


புதிய தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக  "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (நீட்ஸ்) 2012-ஆம் ஆண்டிலிருந்து மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐடிஐ/தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல்  வேண்டும்.  பொதுப் பிரிவினர் 21  முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினர் (SC/ST, BC, MBC, பெண்கள்,  மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 21  முதல் 55 வயது வரை  உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

இத்திட்டத்தின் கீழ்,  உற்பத்தி  மற்றும் சேவை சார்ந்த பொருளாதார  ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் துவங்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.


புதிய தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் http://www.msmeonline.tn.gov.in/needs. என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெறலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தேனி அவர்களை நேரிலோ  அல்லது 04546-252081,  89255-34002 மற்றும் 89255-33998 ஆகிய தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
Embed widget