மேலும் அறிய

முல்லைப்பெரியாறு நீர் திறப்பில் தாமதம்: முதல் போக நெல் சாகுபடி தொடங்குவதில் சிக்கல்.

தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

தேனி மாவட்டத்தில் கோடைமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டுள்ளது. விவசாய தேவைக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியபோதும் தீவிரமடையாததால் மேற்கு தொடர்ச்சி மலையில் மலைப்பொழிவு மிகவும் குறைந்து காணப்படுகிறது. முல்லைப்பெரியாறு நீர் திறப்பில் தாமதம்: முதல் போக நெல் சாகுபடி தொடங்குவதில் சிக்கல்.

குறிப்பாக கம்பம், கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பருவமழை போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தபோதும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் ஆனால் தற்போது அணையில்  போதுமான நீர் இருப்பு இல்லாததால் இந்த மாதம் இறுதியை எட்டியும் நீர் திறப்பு இல்லாததால் முதல் போக சாகுபடி செய்வதில் கேள்விக்குறியான நிலை ஏற்பட்டுள்ளது

இதே நேரத்தில் தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வருசநாடு, வெள்ளிமலை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மூலவைகை ஆறு முற்றிலும் வறண்டு மலை கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேகமலை அருவி, கும்பக்கரை அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

முல்லைப்பெரியாறு நீர் திறப்பில் தாமதம்: முதல் போக நெல் சாகுபடி தொடங்குவதில் சிக்கல்.

முல்லைப்பெரியாற்றில் மட்டும் தண்ணீர் ஓரளவு செல்கிறது. கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் வறண்டு மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 31.73 அடியாக உள்ளது. 226 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அணையில் 443 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.45 அடியாக உள்ளது. 170 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget