மேலும் அறிய

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல்.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. சென்ற மாதத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் இரு மாவட்டங்களில் நோய் தொற்றானது தினசரி நூற்றுக்கும் கீழ் இருந்து வந்தது. தற்போது நோய் தொற்றின் பாதிப்பு  இரு மாவட்டங்களிலும் ஐம்பதுக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரத்தை பொருத்தவரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாத நிலையில் தேனி மாவட்டத்தில் 7ம் தேதி நேற்று மட்டும் ஒரே நாளில் 5 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ம் தேதி வரையில் மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

அதன் பின்பு தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளது. அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் கடந்த 5 ம் தேதி வரையில் 1 லட்சத்து  73 மூன்றாயிரத்து 810 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி 35 பேரும் , 5ம் தேதி 31 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தேதி வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 31767 பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்த நிலையில், 30778 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அன்றைய தேதி வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 603 பேர்  நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதன் பின்  6 ம் தேதி 29 பேர் , 7ம் தேதி 25 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.   இந்நிலையில் இன்று  திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31821ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று   44 நபர்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30882-ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும்  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 605. தற்போது 334 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர்  உயிரிழந்துள்ளனர்.

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!

அதே போல் தேனி மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி 45 பேரும் , 5ம் தேதி 39 நபர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தேதி வரையில்  தேனி மாவட்டத்தில் மட்டும் 42554பேர் நோய் தொற்றால் பாதிப்படைந்திருந்த நிலையில், 41622 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில்  தேனி மாவட்டத்தில் இன்று 28 நபர்களுக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42548 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 27 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41754-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 503 ஆக இருக்கிறது. இன்று 291 பேர்  கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

தலைப்பு செய்திகள்

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget