திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். பின்னர் தங்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண் மோசடி செய்துவிட்டதாக கூறி புகார் மனு கொடுத்தனர்.


நடந்த சம்பவம் குறித்து பெண்கள் கூறுகையில், ”கடந்த 2016ஆம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அப்போது தனியார் நிறுவனம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்கு வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக அவர் கூறினார். மேலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம்வரை கடன் வாங்கித் தருவதாக தெரிவித்தார். அப்போது பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளில் இருந்த நாங்கள் கடன் வாங்க விரும்பினோம்.


தேனியில் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 அரசு அதிகாரிகள் கைது




ஆனால், அந்தப் பெண் ரூ.1 லட்சம் கடன் பெறுவதற்கு ரூ.8 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றார். அதை உண்மை என நம்பிய நாங்கள் அவரிடம் முன்பணமாக 8,000 ரூபாயை கொடுத்தோம். எங்களைப் போன்று பழனி, தேனி, பெரியகுளம், மதுரை, சிவகங்கை, திருச்சி உள்பட பல ஊர்களை சேர்ந்த பெண்கள் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர்.




ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்டெத்தஸ்கோப், மருத்துவ கோர்ட் அணிவித்து அழகு பார்த்த மாவட்ட ஆட்சியர் !



அப்படி மொத்தம் 24 கோடி ரூபாய்வரை பலரிடம் வசூலித்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர் கூறியபடி கடன் பெற்று தரவில்லை. முன் பணத்தை மீண்டும் கேட்டாலும் அவர் கொடுக்கவில்லை.  இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் செல்ஃபோனில் பேசி மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, எங்களின் பணத்தை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்