மேலும் அறிய

மேற்குவங்கத்தை அதிரவைத்த ரெய்டு.. மம்தாவின் கட்சியை சிக்கவைத்த நடிகை அர்பிதா முகர்ஜி...யார் இவர்?

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத்துறை இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத்துறை இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. இந்தத் தொகையானது ஆசிரியர் பணி நியமன மோசடியில் கிடைத்த தொகையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் அர்பிதா முகர்ஜி இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படத்தில், முகர்ஜியும் பானர்ஜியும் ஒன்றாக இருப்பதைக் காணலாம்.


மேற்குவங்கத்தை அதிரவைத்த ரெய்டு.. மம்தாவின் கட்சியை சிக்கவைத்த நடிகை அர்பிதா முகர்ஜி...யார் இவர்?

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது சுவேந்து அதிகாரியின் மறைமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

"இது தொடர்பாக யார் சிக்கி உள்ளார்களோ, அந்த நபரே விளக்கம் அளிக்க வேண்டும். இதில் கட்சியின் பெயர் ஏன் இழுக்கப்படுகிறது என்பதை கண்டறிய முயற்சித்து வருகிறோம். சரியான நேரத்தில் நாங்கள் அறிக்கை வெளியிடுவோம்" என குணால் கோஷ் ட்வீட் செய்துள்ளார்.

இது தவிர, அமலாக்கத்துறை இயக்குநரக அலுவலர்கள் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டிலும் சோதனை நடத்தினர். ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

மேற்குவங்கத்தை அதிரவைத்துள்ள அர்பிதா முகர்ஜிக்கும் மம்தா கட்சிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை பார்ப்போம்.

  • அர்பிதா முகர்ஜி, மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
  • தெற்கு கொல்கத்தாவின் புகழ்பெற்ற துர்கா பூஜைக்கும் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது 2019 துர்கா பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இவற்றை, சுவேந்து அதிகார் வெளியிட்டுள்ளார். இந்த பூஜையில் சாட்டர்ஜியும் கலந்து கொண்டுள்ளார்.
  • பார்த்தா சாட்டர்ஜியின் துர்கா பூஜை கமிட்டியின் விளம்பரப் பிரசாரங்களின் முகமாக முகர்ஜி இருந்துள்ளார். சில வங்க படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget