மேலும் அறிய

Unified Pension Scheme: இத்தனை பலன்களா? ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தால் என்ன லாபம்? ஓர் அலசல்

Unified Pension Scheme: மத்திய அரசு அடுத்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் என்னென்ன பலன்கள்?உள்ளது என்பதை கீழே விரிவாக காணலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. மாநில அரசுகளும் இதை செயல்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மாற விருப்பம் தெரிவிப்பவர்களும் விருப்பமிருந்தால் மாறிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பலன்கள் என்னென்ன?

மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

  • இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.
  • பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாக 12 மாதங்களில் பெற்ற ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  • இந்த 50 சதவீத ஓய்வூதியமானது 25 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு கிடைக்கும்.
  • அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அவர்கள் பணி செய்த ஆண்டுகளுக்கு ஏற்ப ஓய்வூதியம் மாறும்.
  • ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியரின் மறைவுக்கு பின் அவர் பெற்ற பென்சனில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு ஊழியர்களில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும்.
  • பணியில் இருந்து ஓய்வு பெறும்போது கிராஜூவிடியுடன் ரொக்கப் பலனும் வழங்கப்படும். ஓய்வின்போது பெற்ற மாத ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10ல் ஒரு பங்கு ரொக்கப் பலனாக வழங்கப்படும். நிறைவு செய்த ஒவ்வொரு ஆறு மாத பணி அடிப்படையில் இது வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் குறையாது என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
Embed widget