மேலும் அறிய

குடிபோதையில் 10 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு 2 ஆண்களுக்குள் திருமணம் : தெலங்கானாவில் நடந்த விநோதம்! 

தெலங்கானாவில் சமீபத்தில் இரண்டு ஆண்கள் குடிப்பழக்கத்தால் போதை ஏறிய நிலையில் குடித்த இடத்திலேயே ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்கிற பழமொழியை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு ஜோடி குடித்துவிட்டு திருமணம் செய்த விநோதத்தை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், மேலே சொன்னதைச் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். தெலங்கானாவில் சமீபத்தில் இரண்டு ஆண்கள் குடிப்பழக்கத்தால் போதை ஏறிய நிலையில் குடித்த இடத்திலேயே ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டனர்.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜோகிபேட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞர், மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் துமாபாலபேட் கிராமத்தில் உள்ள ஒரு சாராயக் கடையில் ஒருவரையொருவர் சந்தித்து பின்னர் குடிப்பழக்கத்தின் மூலம் நண்பர்களானவர்கள்.

கடந்த மார்ச் மாதம் அந்த மாநிலத்தில் உள்ள ஜோகிநாத் குட்டா என்னும் கோவிலில் நடந்த வைபவத்தில் ஆட்டோ டிரைவர் மற்றொருவரின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். திருமணம் நிகழ்ந்த முழு நேரமும் இருவரும் கட்டுப்பாடில்லாமல் குடிபோதையில் இருந்துள்ளனர்.

திருமண சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அன்றே இருவரும் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

ஜோகிப்பேட்டையைச் சேர்ந்த அந்த இளைஞர் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் திருமணம் செய்ததைக் கூறியபோதுதான் ரகசியம் வெளிப்பட்டது. மேலும் விவரம் குறித்து ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, ​​இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதற்காக சந்தித்து வந்ததாகத் தனது பெற்றோரிடம் கூறினார். மேலும், திருமண நிகழ்வு நடந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதை அடுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், ஆட்டோ டிரைவரும் அவரது பெற்றோரும் ஜோகிப்பேட்டை இளைஞரைத் தங்கள் வீட்டிற்குள் நுழைய விடவில்லை. இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் ஜோகிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். இதை அடுத்து இருவரும் போலீஸில் வழக்கு தொடர வேண்டாம் என பரஸ்பரம் முடிவு செய்ததால் வழக்கு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையே எப்படி தீர்ந்தது என்பது குறித்த எந்த விவரங்களையும் போலீசார் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாளிதழின் செய்திகளின்படி, ஜோகிபேட்  இளைஞருக்கு ஆட்டோ ஓட்டுநருடன் இணைந்து வாழ ரூ. 10,000 வழங்கப்பட்டது. பத்தாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டுதான் இது அரங்கேறியுள்ளது, ஆனால் போதை தெளிந்த பின் ஒரு லட்ச ரூபாய்க் கொடுத்தாலும் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என இரண்டு தரப்பு இளைஞர்களும் மறுத்துள்ளனர். அவ்வளவு பெரிய தொகையையும் ஏற்க மறுத்த நிலையில் மேலும் கூடுதல் விவாதத்திற்குப் பிறகு, இருவரும் அவர்களது குடும்பங்களால் முறையாகப் பிரித்து வைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. குடிபோதையில் கல்யாணம் செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ரயில் வசதி! எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?
ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ரயில் வசதி! எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் வருகிறது Scheduled Message வசதி! எப்போது முதல் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் வருகிறது Scheduled Message வசதி! எப்போது முதல் தெரியுமா?
ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய முடியுமா? திருநங்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய முடியுமா? திருநங்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
Embed widget