- கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் கோயிலுக்கு சென்று கடவுளிடம் முறையிட்டால் சற்று நிம்மதியாக இருப்பதாக உணர்வார்கள். அந்த அத்தகைய கோயிலிலேயே பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வார்கள். அப்படி ஒரு சோக சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்குள்ள பெலகாவி மாவட்டத்தில் ஹூலிகட்டி என்ற கிராமம் உள்ளது. மேலும் படிக்க..
- ரூ.200 கோடி வசூலித்த மஞ்சும்மல் பாய்ஸ்.. தனது பாடலை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!
அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதற்காக பல படங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கூலி படத்தில் தனது இசையைப் பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை அனைத்தும் தனக்கே சொந்தமானவை என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மற்றுமொரு படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இளையராஜா மேலும் படிக்க..
- மேற்கு வங்கத்தில் ரம்ஜானுக்கு விடுமுறை; துர்கா பூஜைக்கு இல்லை! அமித்ஷா குற்றச்சாட்டு உண்மையா?
மேற்கு வங்க அரசு, இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜானுக்கு விடுமுறை அளிக்கிறது, ஆனால் இந்துக்கள் கொண்டாடும் துர்கா பூஜைக்கு விடுமுறை அளிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா என்ன பேசினார்? எங்கு பேசினார்? அவர் பேசியது உண்மைதானா என்பது குறித்து பார்ப்போம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில், சமீபத்தில் மக்களவை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதாகவும், ஆனால் ரம்ஜான் பண்டிகையின் போது மட்டும் முஸ்லிம்களுக்கு விடுமுறை அளிக்கிறார் என்றும் கூறினார். மேலும் படிக்க..
- இந்தியா கூட்டணியில் பிரதமராகும் ஆசை இருக்கா? - ஓபனாக சொன்ன கெஜ்ரிவால்!
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மக்களவை தேர்தல் குறித்து பேட்டியளித்தார். ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கும், இந்திய அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். மேலும் படிக்க..
- ஒடிசா கோயில் கரூவூல சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது என்ற மோடி; எழுந்த கடும் விமர்சனம்! என்ன நடந்தது?
ஒடிசா மாநிலம் பரப்புரையின் போது, பிரதமர் மோடி, ஒடிசா மாநிலத்தில் உள்ள நகைகள் வைக்கப்பட்ட அறையின் தொலைந்து போன சாவியானது, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், என்ன நடந்தது? பிரதமர் மோடி என்ன பேசினார்? என்பது குறித்து பார்ப்போம். மேலும் படிக்க..