மேற்கு வங்க அரசு, இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜானுக்கு விடுமுறை அளிக்கிறது, ஆனால் இந்துக்கள் கொண்டாடும் துர்கா பூஜைக்கு விடுமுறை அளிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா என்ன பேசினார்? எங்கு பேசினார்? அவர் பேசியது உண்மைதானா என்பது குறித்து பார்ப்போம்.
அமித்ஷா பேசியவை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில், சமீபத்தில் மக்களவை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதாகவும், ஆனால் ரம்ஜான் பண்டிகையின் போது மட்டும் முஸ்லிம்களுக்கு விடுமுறை அளிக்கிறார் என்றும் கூறினார்.
மேலும் அமித்ஷா தெரிவித்ததாவது, மம்தா பானர்ஜி ராமர் கோயிலை எதிர்க்கிறார். அவர் துர்கா பூஜைக்கு அனுமதி வழங்கவில்லை, ஆனால் ரம்ஜான் நாளில் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கிறார். எங்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை, நீங்கள் விரும்பினால் விடுமுறை கொடுங்கள். ஆனால், துர்கா பூஜைக்கும் நீங்கள் ஏன் விடுமுறை அளிக்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு?” என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
உண்மை என்ன?
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூற்று குறித்து ஆராய்கையில், அவரது கருத்து பொய்யானது. மேற்கு வங்க அரசு துர்கா பூஜைக்கு மட்டுமின்றி மற்ற மத நிகழ்வுகளுக்கும் விடுமுறை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமித்ஷா பேச்சின் உண்மை தன்மை குறித்து, மேற்கு வங்க துர்கா பூஜைக்கு மட்டுமல்ல, மற்ற மத நிகழ்வுகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதைக் கண்டறிந்ததாக, உண்மை தன்மையை கண்டறியும் BOOM வலைதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே மத்திய உள்துறை அமைச்சர் பேசியது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்படுகிறது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சியினர் சிலர், பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். பொது மக்கள், உண்மை தன்மையை ஆராய்ந்து, எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும், பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.