• 2024ல் 5-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர்.. அடுத்து எப்போ தெரியுமா? சூறாவளி பயணத்தில் மோடி..


மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். நடப்பாண்டு தொடங்கி 5 வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி மேலும் படிக்க..



  • ”பாகிஸ்தானியர்களுக்கு பாதுகாப்பு; விவசாயிகளுக்கு துப்பாக்கிச்சூடா “- அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்


மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதையடுத்து, இச்சட்ட திருத்திற்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. குடியுரிமை திருத்த சட்டமானது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர்களான இந்து, சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது. மேலும் படிக்க..



  • நெற்றியில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி! என்ன நடந்தது?


மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில் இன்று இவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெத்தியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வழிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது. மேலும் படிக்க..



  • தேர்தல் பத்திரங்கள்; தேதிவாரியாக பணம் அளித்தவர்களின் விவரம் வெளியிட்ட தேர்தல் ஆணையம்


அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தவர்கள் மற்றும் அரசியல் கட்சி பெற்றுள்ள நிதி குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..



  • விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி இல்லை.. மிரளவைக்கும் தேர்தல் வாக்குறுதிகள்.. ராகுல் காந்தி அடுத்த அதிரடி!


 கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இளைஞர்கள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குறுதிகளை வெளியிட்டுவிட்டது. மேலும் படிக்க..