Mamata Banerjee Injured : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில் இன்று இவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெத்தியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வழிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.






மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன?


மம்தா பானர்ஜிக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிகங்கேயில் நடைபெற்ற சுப்ரதா முகர்ஜியின் சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். பின்னர், அவர் வீடு திரும்பியுள்ளார்.


வீடு திரும்பி அவர் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அலமாரி ஒன்றில் அவர் இடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அப்போது, வீட்டில் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் உறவினர் கஜாரி பானர்ஜி இருந்துள்ளனர்.


இதையடுத்து, அவர்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு மம்தா பானர்ஜியை அழைத்துச் சென்றனர். இவ்வாறு கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.


மருத்துவமனை முன்பு குவியும் தொண்டர்கள்:


மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் அவரது காயத்திற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தையல் போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தீயாய் பரவியதால், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மம்தா பானர்ஜி விரைவில் குணம் அடைய வேண்டும் என்று தலைவர்கள், தொண்டர்கள் பிரார்த்திப்பதாக சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் கொண்டேன். விரைவில் குணமடைய வாழ்த்துகள் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி


மேலும் படிக்க: US Election: 100 ஆண்டுகளில் முதல்முறை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் திரும்பும் வரலாறு.. பைடனுக்கு திருப்பி தருவாரா டிரம்ப்?