பல்வேறு வங்கி பதவிகளுக்கான தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பதவிக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்பதை நினைவூட்டுகிறது இந்த கட்டுரை.
ஐபிபிஎஸ் என்பது 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யும் வகையிலான தேர்வுகளை நடத்துகிறது.
இது ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.
இந்நிலையில், ஐபிபிஎஸ் கிளர்க், ஐபிபிஎஸ் பிஓ, ஐபிபிஎஸ் எஸ்ஓ உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
வங்கி தேர்வுகள் விவரம்:
வரிசை எண் | தேர்வு பெயர் | விண்ணப்பிக்கும் காலம் | முதல்நிலை தேர்வு | முதன்மை தேர்வு |
1 |
ஐபிபிஎஸ் கிளர்க் IBPS CLERK |
ஜூலை-2024 | அக்டோபர் 19,20 | நவம்பர் 30 |
2 |
ஐபிபிஎஸ் பிஓ IBPS PO |
ஆகஸ்ட் | அக்டோபர் 19,30 | நவம்பர் 30 |
3 |
ஐபிபிஎஸ் எஸ்.ஓ IBPS SO |
செப்டம்பர் | நவம்பர் 9 | டிசம்பர் 14 |
4 |
ஆர்.ஆர். பி IBPS RRB OFFICE ASSISTANT |
ஜூன் | ஆகஸ்ட் 3, 4,10,17, 18 | அக்டோபர் |
5 |
ஆர்.ஆர்.ஆர்- பி.ஓ IBPS RRB PO |
ஜூன் | ஆகஸ்ட் 3, 4,10,17, 18 | செப்டம்பர் 29 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள வங்கி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள், இப்பொழுதே தேர்வுக்கு தயாராகுங்கள். தேர்வுக்கென கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கு ஏற்ப உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்
மாதிரி தேர்வுகளை தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே வாருங்கள்; அது உங்களுக்கு தேர்வு தொடர்பான ஐயப்பாடுகளையும். மேலும் எப்படி தேர்வு நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே நீங்கள் அறிந்து கொள்ள உதவும்.
தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், பாடத்திட்டத்தில் எந்த பகுதியை, எப்பொழுது படிக்க வேண்டும், எந்த காலத்துக்குள் படித்து முடிக்க வேண்டும் திட்டமிட்டு கொள்ளுங்கள். திட்டமிடலே உங்களை விரைவாகவும், சரியான பாதையை நோக்கிச் செல்லவும் உங்களுக்கு உதவும்.
சில பாடப்பிரிவுகளை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதால், திரும்ப திரும்ப படித்து வைத்து கொள்வது நல்லது.