• இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


    தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் மேலும் படிக்க




  • Higher Education Reservation: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் SC, STக்கான வாய்ப்பு ரத்தா? - மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்

    உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில், பொதுப்பிரிவினரை கொண்டு அந்த இடங்களை நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது.மேலும் படிக்க




  • India Test Cricket: முதல் இன்னிங்ஸில் 100+ ரன்கள் முன்னிலை - டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்விகள்

    டெஸ்ட் கிரிக்கெட்டில்  முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும், இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் தோல்வியுற்றது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் மேலும் படிக்க




  • Tamil Thalaivas Vs U Mumba: யு மும்பாவை ஊதித்தள்ளிய தமிழ் தலைவாஸ்... புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்திற்கு முன்னேற்றம்!
    ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 94-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை எதிர்கொண்டதுஇப்போட்டியானது பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானத்தில்நடைபெற்றதுமுன்னதாக கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 54-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும் படிக்க




  • கீழ்வெண்மணிக்குச் சென்ற ஆளுநர்; கிராமங்கள் வறுமையாக இருப்பதாக வேதனை
    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் ரவி தனது அனுபவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக மேலும் படிக்க




  • I.N.D.I.A Alliance: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை - டி.ஆர். பாலு
    நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே I.N.D.I.A  கூட்டணிக்குள் பிரச்னைதான். அவர் போனதால் I.N.D.I.A  கூட்டணிக்குள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். காங்கிர்ஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பான விருப்பப் பட்டியலை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க




  • வரலாற்றில் முதன்முறை.. 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்..!


    I.N.D.I.A கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி விலகிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 9ஆவது முறையாக பிகார் முதலமைச்சராக  பதவியேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார்.தேசிய அளவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த இவர், பிகார் மாநில முதலமைச்சராக 8 முறை பதவி வகித்தவர். மேலும் படிக்க