India Test Cricket: டெஸ்ட் கிரிக்கெட்டில்  முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும், இதுவரை இந்திய அணி 3 போட்டிகளில் தோல்வியுற்றது.


இந்திய அணி தோல்வி:


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் 436 ரன்களை குவித்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை முன்னிலை பெற்றது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஒல்லி போப்பின் அபார ஆட்டத்தால் 420 ரன்களை குவித்தது. 231 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அண், யாருமே எதிர்பாராத விதமாக 202 ரன்களை சேர்ப்பதற்குள் ஆட்டமிழந்தது. இதனால், 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 






3 மோசமான தோல்விகள்:


ஐதராபாத் டெஸ்ட் கிரிக்கெட்டை போன்று, முதல் இன்னிங்ஸில் 100+ ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும் ஏற்கனவே 2 முறை இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கல்லேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால், இரண்டவது இன்னிங்ஸில் இலங்கை அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதேபோன்று, கடந்த 2022ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது பிர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 132 ரன்களை முன்னிலை பெற்றது. ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 245 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 378 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்து, இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இரண்டு தோல்விகளையும் வெளிநாட்டில் மண்ணில் தான் இந்திய அணி எதிர்கொண்டது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும், உள்ளூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றது இதுவே முதல்முறையாகும்.