தமிழ் தலைவாஸ் - யு மும்பா போட்டி:


 


ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 94-வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியானது பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. முன்னதாக கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 54-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10 இல் தமிழ் தலைவாஸ் அணியின் ஆறாவது வெற்றியாகும். இதற்கிடையில், யு மும்பா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 35-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.


இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் யு மும்பா அணியுடன் விளையாடியது. இதில் தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. அதன்படி, தமிழ் தலைவாஸ் அணியின் ஹிமன்ஷூ போனஸ் மற்றும் மூன்று புள்ளிகள் என மொத்தம் 4 புள்ளிகளை ஆரம்பத்திலேயே பெற்றுக்கொடுத்தார். நரேந்தர் ஹோஷியார் சிறப்பான ரெய்டுகளை மேற்கொண்டார்.


அதேபோல் அஜிங்க்யா பவாரும் சிறப்பன ரெய்டுகளை வெளிப்படுத்தினார்.  இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகளை எடுத்தது. இடையில் யு மும்பா அணி ஆல் - அவுட் ஆகி வெளியேறியது. அப்போது தமிழ் தலைவாஸ் அணி 13 புள்ளிகளை எடுத்தது. முதல் 10 நிமிடங்கள் முடிந்த போது  தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகளும் யு மும்பா அணி 10 புள்ளிகளும் எடுத்தன. முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 27 புள்ளிகளும், யு மும்பா அணி 17 புள்ளிகளும் எடுத்து விளையாடியது.  மறுபுறம் யு மும்பா அணியை பொறுத்தவரை அந்த அணியின் ரெய்டர் குமன் சிங் அணிக்குக்கு அடுத்தடுத்த புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். 


அசத்தல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்:


அதேநேரம் தொடந்து சிறப்பாக விளையாடி வந்த தமிழ் தலைவாஸ் அணி 50 - 34 என்ற கணக்கில் 4 வது முறையாக வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல், இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

 


தமிழ் தலைவாஸ்:


Raid points: 24


Super raids : 1


Tackle points: 19


All out points: 6


Extra points: 1


யு மும்பா:


Raid points: 24


Super raids : 1


Tackle points: 8


All out points: 0


Extra points: 2