தமிழ்நாடு:



  •  காந்தியடிகள் நினைவு தினம் - ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

  • விவசாயிகளை எதிரிகள் போல் பார்க்கும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 

  • ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எச்சரிக்கை 

  • தென்காசி அருகே காருடன் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் 

  • தமிழ்நாட்டில் கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை 

  • இட ஒதுக்கீடு விதிகளில் மாற்றம் செய்து யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் 

  • முருகனின் அறுபடை வீடுகளுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து செல்லும் தமிழ்நாடு அரசின் திட்டம் தொடக்கம்

  • இந்தியா கூட்டணியில் கடைசியில் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இருப்பார் - டிடிவி தினகரன் கருத்து

  • அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நாசமாக்கி விட்டார் -  ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

  • அண்ணாவின் 55வது நினைவு தினம் - பிப்ரவரி 3 ஆம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு

  • தேமுதிக எந்த லட்சியத்துக்காக தொடங்கப்பட்டதோ அதை விரைவில் அடையும் - பிரேமலதா விஜயகாந்த் சூளூரை

  • எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தை வைத்து அரசியல் செய்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண்டனம் 


இந்தியா: 



  • பீகார் அரசியல் அதிரடி திருப்பம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

  • பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு - பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து 

  • மீண்டும் நியாய யாத்திரையை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

  • கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம் 

  • நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது முன்பே தெரியும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தகவல் 

  • அரியானாவில் பெரிய அரசியல் மாற்றம் தேவை என மக்கள் விரும்புகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் 

  • பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருவதாக ராகுல்காந்தி கடும் விமர்சனம் 

  • இடஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வித்துறை மறுப்பு 


உலகம்: 



  •  அமெரிக்காவில் தரையிறங்கியபோது குலுங்கிய விமானம் - 6 பேர் காயம் 

  • அர்ஜெண்டினாவின் உலக பாரம்பரிய சின்னமான லாஸ் அலர்செஸ் தேசிய பூங்காவில் காட்டுத்தீ 

  • ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

  • மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைக்கலப்பில் ஈடுபட்ட எம்.பி.,க்களால் பரபரப்பு 

  • பிரேசிலில் ’6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 


விளையாட்டு: 



  •  இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி 

  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி

  • இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி 

  • ப்ரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி 

  • ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி