நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் ரவி தனது அனுபவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்." என குறிப்பிட்டுள்ளார். 


 






தமிழ்நாடு ஆளுநருக்கும்  தமிழ்நாடு அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகின்றது. ஆளும் திமுக குறித்தும் அதன் கொள்கைகள் குறித்து ஆளுநர் ஆர் என் ரவி விமர்சிப்பதும், அதற்கு திமுக பதிலடி கொடுப்பது வழக்கமாகவே மாறிவிட்டது. இதனால் ஆளும் கட்சி மீது பெரும் கோபத்தில் இருக்கும் ஆளுநர் திமுக அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதும், அது குறித்து அழுத்தங்கள் எழும்போது அந்த மசோதாக்கள் மீது சந்தேகம் உள்ளது அல்லது கேள்வி உள்ளது என திருப்பி அனுப்புகின்றார். 

ஆளுநார் வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் பயணிப்பது வழக்கம். அண்மையில் கூட திருவண்ணாமலைக்குச் சென்று வந்தார். அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி நாகப்பட்டினம் தந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஆளுநர் ரவி, திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வழியாக திருவாரூர் வந்தார். 

திருவாரூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்ற ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லம் சென்றார். அதன்பின்னர் அங்கிருந்த மக்களிடம் நலம் விசாரித்து, கலந்துரையாடினார். அதன் பின்னர் ஆளுநர் தனது எக்ஸ் பக்கத்தில் “ நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.