• தேர்தல் தோல்வி எதிரொலி; கமல்நாத் பதவியை பறித்த காங்கிரஸ் - மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு


காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான கமல்நாத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜிது பத்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பத்வாரி சாவ் தொகுதியில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவியவர், மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக உமாங் சிங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க



  • Ayodhya Ram Mandir : "அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு யாத்ரீகர்கள் வர வேண்டாம்" : ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் வேண்டுகோள்


உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்த பிறகு ராமர் கோயில் கட்டும் பணி அயோத்தியில் தீவிரமாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாட்டின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். விவிஐபிக்களாக மட்டும் 7 ஆயிரம் பேரை அழைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க



  • சட்டப்பிரிவு 370.. ஊடக சுதந்திரம்.. மனம் திறந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன்


உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன். நாட்டின் திறமைவாய்ந்த நீதிபதிகளில் ஒருவரான ரோஹிண்டன் நாரிமன், கடந்த 2021ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரோஹிண்டன் நாரிமன் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். வழக்கமாக உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால், சில சமயங்களில், தனித்த திறமையின் காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் நேரடியாக நியமிக்கப்படுவது உண்டு. மேலும் படிக்க



  • குஜராத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம்: அப்படி என்னென்ன சிறப்புகள் தெரியுமா? வாயை பிளப்பீங்க!


சூரத்தில் நாளை திறக்கப்பட உள்ள வைர வர்த்தக மையம், 6.7 மில்லியன் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. உலகின் வைர வர்த்தக தலைநகராக சூரத்தை மாற்ற பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூரத்தில் 32 பில்லியன் ரூபாய் மதிப்பில் வைர வர்த்தக மையம் கட்டப்பட்டது. குஜராத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த வைர வர்த்தக மையம் பெரும் உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க



  • CM Siddaramaiah: பெலகாவி சம்பவத்தை கையில் எடுத்த பாஜக.. பதிலடி கொடுத்த முதலமைச்சர் சித்தராமையா..


கர்நாடாக மாநிலம் பெலகாவியில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனும், அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் படிக்க