7 AM Headlines: இதுதான் நேற்று நடந்தவை, இன்று நடக்கப்போறது.. அனைத்தும் உங்களுக்கு தலைப்பு செய்திகளாய்..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

  • மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 37 லட்சம் பேருக்கு ரூ. 6,000 நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
  • தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கிடையாது - முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ல் வெளியிடப்படும் 
  • சென்னையில் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து 1000க்கும் மேற்பட்ட போலி பட்டதாரிகளை உருவாக்கிய மோசடி கும்பல்
  • மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து; 1 கி.மீ தூரம் புகை வெளியேறியதால் பரபரப்பு
  • உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் 2,300 ஏரிகளை ஆழப்படுத்தி மீட்க நடவடிக்கை - சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
  • 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி - அரசு மருத்துவமனையில் அனுமதி
  • இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா: 

  • சட்டமன்ற தேர்தல் தோல்வி காரணமாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் நீக்கப்பட்டுள்ளார்.
  • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மௌனம் காத்து வருவது அவநம்பிக்கையானது - நடிகர் பிரகாஷ் ராஜ் அதிரடி
  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு யாத்ரீகர்கள் வர வேண்டாம் என்று ராம்மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் வேண்டுகோள்
  • இந்தியாவின் மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தின் 50.50 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது தனக்கு குழப்பத்தை தருகிறது - முன்னாள் நீதிபதி நாரிமன்

உலகம்:

  • சீனா, அமெரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா - கேரளாவில் பெண் ஒருவரும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
  • உக்ரைனில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனிநபர் ஒருவர் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் காயம்
  • குவைத் நாட்டின் மன்னரான நவாஃப் அல் அகமது அல் ஜாபேர் அல் ஷபா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 
  • இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காசாவில் பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம் - பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம்

விளையாட்டு:

  • இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.
  • விஜய் ஹசாரே டிராபி - முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தூக்கிய ஹரியானா
  • டி20 ஐ.பி.எல். கிரிக்கெட் போல டி10 கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
Continues below advertisement