• மதுரை அரசி மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..!


பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைப்பெருவிழா ஏப்ரல் 12 அன்று மீனாட்சி அம்மன் கோயிலின் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை விழாவின் முற்பகுதியில் 12 நாட்கள் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்வுகளின் மைய விழாவான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும் படிக்க..



  • தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25% மாணவர் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!


தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் மீது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 12(1) (சி) கீழ் சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு மேலும் படிக்க..



  • கேரளாவில் முட்டி மோதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் : ராகுல் காந்தியை தாக்கிப் பேசும் பினராயி விஜயன்!


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, வரும் 26ஆம் தேதி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. கேரளாவை பொறுத்தவரையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக உள்ளது. தேசிய அளவில் கூட்டணி அமைத்தாலும் கேரளாவை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் பரம எதிரிகளாக உள்ளன. மேலும் படிக்க..



  • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எவ்வளவு? வெளியானது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால், வாக்குப்பதிவு விவரம் குறித்து தொடர் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கையில், 72.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஆகிய தொகுதிகளில் 65 சதவிகித்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..



  • "தேர்தலில் போட்டியிட கூட தைரியம் கிடையாது" சோனியா காந்தியை வம்புக்கு இழுக்கும் பிரதமர் மோடி!


நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதி நடக்க உள்ளது. மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள நான்டெட் மற்றும் ஹிங்கோலி தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் படிக்க..