தமிழ்நாடு:



  • தமிழ்நாடு முழுவதும் வெப்பம் அதிகரிப்பு; 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில் - 24ம் தேதி வரை வெப்ப அலை வீசும் அபாயம் 

  • சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை தகவல்

  • மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு; 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • தமிழ்நாடு முழுவதும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு - 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு

  • மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் - நாளை தேரோட்டம்

  • வட தமிழக உள்  மாவட்டங்களில் 42 டிகிரி வரை வெப்பநிலை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

  • நகர்ப்புற சுணக்கம் மற்றும் மதிய வேளை வெயிலின் தாக்கத்தால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 55,080-ஆக விற்பனை செய்யப்பட்டது.


இந்தியா: 



  • பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் சர்ச்சை

  • இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்புகள் தொடக்கம் - உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவிப்பு

  • அமேதியை இழந்த காங்கிரஸின் இளவரசர் வயநாட்டையும் இழப்பார் என பிரதமர் மோடி ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.

  • இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால், புதிய பயண தேதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.

  • பயங்கரவாத ஆயுதங்களை சப்ளை செய்து வந்த அண்டை நாடு தற்போது கோதுமை மாவு இல்லாமல் திண்டாடி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூபாய் 3 ஆயிரத்து 674 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

  • தூர்தர்ஷன் சேனலின் லோகோ காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


உலகம்: 



  • சீனாவில் 324 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் இயக்கம்.

  • கடந்த ஒரு வாரத்தில் நைஜீரியாவில் 192 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

  • காசா: பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 34,049 ஆக உயர்வு.

  • ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு.

  • புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா நிகழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • மனைவின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலக்கப்பட்டுள்ளது என இம்ரான் கான் குற்றச்சாட்டு


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024: இன்று கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.

  • பவர்பிளே முடிவில் 125 ரன்களை குவித்து புதிய சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

  • ஐபிஎல் 2024: டெல்லி அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணி. 

  • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.