Tamil Nadu Voting Percentage: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்:


பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால், வாக்குப்பதிவு விவரம் குறித்து தொடர் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கையில், 72.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.


குறிப்பாக, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஆகிய தொகுதிகளில் 65 சதவிகித்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கோவையில் 70 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக கூறப்படட்டது. 


ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக திருத்தி வெளியிடப்பட்டது. அதில், சென்னையை பொருத்தவரையில் வடசென்னையில் மட்டுமே 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கை:


மத்திய சென்னையில் 53.91 சதவிகித வாக்குகளும் தென் சென்னையில் 54.24 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. பொதுவாக திருத்தப்பட்ட வாக்குப்பதிவு விவர அறிக்கையில் சிறிய சிறிய மாற்றங்கள் நிகழலாம். ஒரு சதவிகிதம் 2 சதவிகிதம் என கூட குறையலாம்.


ஆனால், சென்னையில் உள்ள மக்களவை தொகுதிகளின் வாக்குப்பதிவு விவரங்களில் 8 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை மாற்றம் ஏற்பட்டது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுத்தது. இதனால், பல சந்தேகங்கள் எழுந்தது.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு விவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 69.49 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொகுதி வாக்கு சதவீதம்


1. திருவள்ளூர் - 68.31%


2. வடசென்னை  60.13%


3. தென்சென்னை - 54.27%


4. ஸ்ரீபெரும்புதூர் - 60.21%


5. காஞ்சிபுரம் - 71.55%


6. அரக்கோணம் - 74.08%


7. மத்திய சென்னை - 53.91%


8. வேலூர் - 73.42%


9. கிருஷ்ணகிரி - 71.31%


10. தருமபுரி - 81.48%


11. திருவண்ணாமலை - 73.88%


12. ஆரணி - 75.65%


13. விழுப்புரம் - 76.47%


14. கள்ளக்குறிச்சி - 79.25%


15. சேலம் - 78.13%


16. நாமக்கல் - 78.16%


17. ஈரோடு - 70.54%


18. திருப்பூர் - 70.58%


19. நீலகிரி - 70.93%


20. கோவை - 64.81%


21. பொள்ளாச்சி - 70.70%


22. திண்டுக்கல் - 70.99%


23. கரூர் - 78.61%


24. திருச்சி - 67.45%


25. பெரம்பலூர் - 77.37%


26. கடலூர் - 72.28%


27. சிதம்பரம் - 75.32%


28. மயிலாடுதுறை - 70.06%


29. நாகை - 71.55%


30. தஞ்சை - 68.18%


31. சிவகங்கை - 63.94%


32. மதுரை - 61.92%


33. தேனி - 69.87%


34. விருதுநகர் - 70.17%


35. ராமநாதபுரம் - 68.18%


36. தூத்துக்குடி - 59.96%


37. தென்காசி - 67.55%


38. நெல்லை - 64.10%


39. கன்னியாகுமரி - 65.46%


தமிழ்நாடு மொத்த வாக்குப்பதிவு - 69.46%


புதுச்சேரி வாக்குப்பதிவு - 79.81%


இந்த குழப்பத்தால் கோவை உள்ளிட்ட தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.


இதையும் படிக்க: The Longest Wait - நீண்ட கால காத்திருப்பு தொடங்கியது - 45 நாள் காவல் பணியைத் தொடங்கிய கட்சிகள்