தூக்கத்தில் இருந்து மீளும் ரோவர்


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம். முக்கியமாக நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில்  சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது. மேலும் வாசிக்க..


ரூ.560 கோடி மகசூல் இழப்பீடு


இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் சார்பில் ரூபாய் 560 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..


காவிரி விவகாரம்


காவிரி விவகாரத்தில் கூடுதல் நீர் திறக்கக் கோரிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், தமிழக அரசு அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.மேலும் வாசிக்க..


ஈஷா கிராமோத்சவம்


இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்தாண்டு மிகப் பிரமாண்டமான போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15-வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்தாண்டு முதல்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி என மொத்தம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க..


மகளிர் இடஒதுக்கீடு மசோதா


மக்களவையில் பெரும்பான்மையாக நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு 33% சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 171 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவையில் இருந்த ஒரு உறுப்பினர் கூட இதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை.  மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று அதாவது . இதற்கு 454 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். மேலும் வாசிக்க..


சபரிமலை தரிசனம் - நெகிழ்ச்சியா நிகழ்வு


கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் அனைத்து வயதினருடைய ஆண்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். என்னதான் நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தாலும் மக்களிடையே பெரும்பாலும் பழைய ஐதீகமே தொடர்கிறது. இப்படியான நிலையில் ஐயப்பனுக்கு கார்த்திகை - மார்கழி மாதம் தான் உகந்தது என்றாலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் சாமி தரிசம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் வாசிக்க..


Moto GP ரேஸ்


இந்தியாவில் முதல் முறையாக Moto GP ரேஸ் நடத்தப்பட உள்ளது. இந்த பந்தய சாம்பியன்ஷிப் போட்டியானது (இன்று) செப்டம்பர் 22 முதல் 24 வரை உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச சர்க்யூட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தில் பங்கேற்க உலகின் பல சிறந்த பைக் ரேசர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். முன்னதாக, இந்தியாவில் ஃபார்முலா ஒன் பந்தயமும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க..