இந்தியாவில் முதல் முறையாக Moto GP ரேஸ் நடத்தப்பட உள்ளது. இந்த பந்தய சாம்பியன்ஷிப் போட்டியானது (இன்று) செப்டம்பர் 22 முதல் 24 வரை உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச சர்க்யூட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தில் பங்கேற்க உலகின் பல சிறந்த பைக் ரேசர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். முன்னதாக, இந்தியாவில் ஃபார்முலா ஒன் பந்தயமும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த Moto GP ரேஸானது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். போட்டி நடக்கும் புத்தர் இன்டர்நேஷனல் சர்க்யூட் பற்றி பேசுகையில், இது 5.14 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேலும் இது உலகின் பிரபலமான பந்தய தடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த மோட்டோ ஜிபி ரேஸானது நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படும். இந்த பைக் ரேஸை நேரில் காண ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த மெகா போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த உலகின் தலை சிறந்த ரேஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம், இதை ஏற்பாடு செய்யும் 31வது நாடாக இந்தியா நாடு புதிய மதிப்பை பெறும்.






இந்தியா Moto GP ரேஸ்ஸிற்கான டிக்கெட்டுகளை எவ்வாறு பதிவு செய்யலாம்?


மோட்டோ ஜிபி பந்தயத்தை சர்க்யூட்டில் இருந்து பார்க்க, புக் மை ஷோவில் அதன் டிக்கெட்டுகளை வாங்கலாம். மூன்று நாட்கள் நடக்கும் இந்த பந்தயத்திற்கு ஒவ்வொரு நாளும் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது முக்கியமானது. டிக்கெட்டுகளின் விலையை பற்றி அறிய வேண்டுமானால், இதன் விலை ரூ 800 முதல் தொடங்கி, அதிகபட்ச டிக்கெட் விலை ரூ 1,80,000 ஆகும்.


டிக்கெட் விலைகள்:


டிக்கெட் விலைகள் ரூ.800, ரூ.2,500, ரூ.6,000, ரூ.8,000, ரூ.15,000, ரூ.25,000, ரூ.40,000, ரூ.80,000 மற்றும் மிகவும் விலையுயர்ந்த விஐபி லவுஞ்ச் டிக்கெட்டின் விலை ரூ.1,80,000. டிக்கெட் வாங்கி நேரடியாக பார்ப்பவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் இலவசமாக வழங்கப்படும். 


முன்னதாக, போட்டி நடைபெறும் ட்ராக் எப்படி உள்ளது என்பதை பார்க்க முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 






மோட்டோ ஜிபி ரேஸின் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கை வீட்டில் இருந்து பார்ப்பது எப்படி?


முதன்முறையாக, நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மோட்டோ ஜிபி பந்தயமும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஸ்போர்ட்ஸ் 18 சேனலின் டிவியில் இந்த பந்தயத்தை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்த பந்தயத்தின் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஜியோ சினிமாவில் காணலாம்.