தமிழ்நாடு:
- வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் சாலை பணிகளை முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- 17 வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் நாளை முதல் கடலில் கரைக்க அனுமதி
- முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மாட்டேன் - அண்ணாமலை அதிரடி
- இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி மிகப் பிரமாண்டமாக போட்டியை நடத்தப்பட உள்ளது.
- 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 560 கோடி மகசூல் இழப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் ரங்கசாமி
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- நீட் தேர்வால் பயனில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
- நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவரை விழிக்க வைக்கும் பணிகள் தொடக்கம் - இஸ்ரோ தகவல்
- ஜூரோ மார்க் எடுத்தாலும் எம்.எஸ், எம்.டி சீட் கிடைக்கும் - மத்திய அரசின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம்.
- பாதுகாப்பு கருதி கனடா நாட்டினருக்கு விசா தருவது தற்காலிகமாக நிறுத்தம்- இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
- ”தீவிரவாதிகளுக்கு இடமளிக்காதீர்கள்” - கனடா பிரச்னைக்கு மத்தியில் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
- சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
உலகம்:
- கனடாவுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும் - அழைப்புவிடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
- லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு.
- இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது - வெள்ளை மாளிகை தகவல்.
- பாகிஸ்தானில் வருகின்ற ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழப்பு
- தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.
விளையாட்டு:
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று மதியம் தொடங்குகிறது.
- உலக தரவரிசையில் 159 வது இடத்திலும், இந்திய தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள சுமித் நாகல் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டி: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு தகுதிப் பெற்றது.
- ஆசிய விளையாட்டு போட்டி: சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.