• Assembly Elections 2023: மத்திய பிரதேசத்தில் 71.16, சத்தீஸ்கரில் 68.15.. ஆங்காங்கே வன்முறை.. பதிவான வாக்கு சதவீதம் விவரம்!


மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்ததையடுத்து, முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், எந்த கட்சிகள் ஆட்சிக்கு வரும் என்ற பரபரப்பு இப்போதே தொடங்கிவிட்டது.  காலை ஏழு மணி முதலே இரண்டு மாநிலங்களிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகும் (மாலை 6 மணி) பல மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் படிக்க



  • Midhili cyclone: கரையை கடந்த மிதிலி புயல்.. அடுத்த 3 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!


மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'மிதிலி' புயலாக மேலும் வலுப்பெற்றது.  வியாழன் காலை 6 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சிட்டகாங் கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 625 கி.மீ தொலைவிலும், காக்ஸ் பஜார் கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 590 கி.மீ தொலைவிலும், மோங்லா கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், பைரா கடல் துறைமுகத்திற்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டது. மேலும் படிக்க



  • Railway India : பயணிகளே! அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்கள் - மத்திய அமைச்சர் தகவல்


மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் புதியதாக 3 ஆயிரம் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்திற்காக பணியாற்றி வருகிறது. தற்போதுள்ள பயணிகளின் எண்ணிக்கையான 800 கோடியை ஆயிரம் கோடியாக அதிகரிக்க உள்ளோம். இது அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றப்படும். ரயில்களில் பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • கோயில் மீது கட்டப்பட்டதா ஞானவாபி மசூதி? பரபரப்பு அறிக்கை.. கால அவகாசம் கேட்ட இந்திய தொல்லியல் துறை 


உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்து பெண்ககளின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க



  • "நம்பிக்கை இருக்கு" - தேர்தல் நாளில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு மெசேஜ் சொன்ன பிரதமர் மோடி


காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆளும் தெலங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் தொடங்கியது. சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவும் மிசோரத்தில் ஒரே கட்டமாகவும் கடந்த 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மேலும் படிக்க