சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில், அரசூர் மற்றும் எடமணல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை ஜூலை 19, 2025 அன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என இயக்குதலும் மற்றும் பராமரித்தலும், சீர்காழி கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது, முந்தைய நாளன்று அதுபற்றி அறிவிக்கப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்புப் பணியின் போது, சிறு சிறு பழுதுகள் சரிசெய்யப்படுவது, மின்கம்பம் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள்
வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ துணை மின் நிலையம்
* வைத்தீஸ்வரன்கோவில்
* சீர்காழி முழுவதும்
* புங்கனூர்
* சட்டநாதபுரம்
* மேலச்சாலை
* கதிராமங்கலம்
* ஆத்தூர்
* திருப்புங்கூர்
* தென்பாதி
* பனமங்கலம்
* கோவில்பத்து
* கொள்ளிடம் முக்கூட்டு
* விளந்திட சமுத்திரம்
* புளிச்சகாடு
* கற்பகம் நகர்
* புதிய பேருந்து நிலையம்
* பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
அரசூர் 33/11 கி.வோ துணை மின் நிலையம்
* புத்தூர்
* எருக்கூர்
* மாதிரிவேளூர்
* வடரங்கம்
* அகணி
* குள்ளம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
எடமணல் 33/11 கி.வோ துணை மின் நிலையம்
* எடமணல்
* திருமுல்லைவாசல்
* திட்டை
* செம்மங்குடி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
பொதுமக்கள் மின் தடை ஏற்படும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.