திருப்போரூர் முருகன் கோயில்

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும்  கந்த சஷ்டி திருவிழாவானது 6 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது 7ஆம் நாள் முருகனுக்கு திருகல்யாணம் நிகழ்வும் நடைபெறும். இதில் ஆறாம் நாளில் நடைபெறும்  சூரசம்ஹார நிகழ்வை பக்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்து முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. 



 

முருகன் பெருமான் சூரனுடன் மூன்று இடங்களில் போர் புரிந்தார் என்பது ஐதிகம். கடலில் போர் புரிந்த தலம் திருச்செந்தூர். நிலத்தில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம், விண்ணில் போர் புரிந்த இடம் திருப்போரூர். என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு  கந்த சஷ்டி கந்த சஷ்டி லட்சார்ச்சனை  பெருவிழாவானது.

 

திருப்போரூர் முருகன் கோயிலில் மிக  வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி காலை திருப்போரூர் முருகன் கோயில் வட்ட மண்டபத்தில் உள்ள தங்க கொடி மரத்தில்  கோடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை தொட்டி வாகனத்திலும் மாலை நேரத்தில் ஆடு, மயில், யானை, சேவல் என நான்கு வாகனங்களில்  முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



 

இவ்விழாவின் 5ஆம் நாள் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. இதில்  முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமானது நடந்தேறி லட்சார்ச்சனைகளாது நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற நான்கு கட்ட இலட்சார்ச்சனையில் தீப ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  முருக பெருமானை வேண்டி வணங்கி வழிபட்டனர். மாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு தீப தூவ ஆராதனை நடைபெற்றது.

 

பின்னர்  வள்ளி, தெய்வானையுடன் திருப்போரூர் முருகன் கோவில் உள் மண்டப பிரகாரத்தை சுற்றி வந்து தீப தூப ஆராதனை செய்யப்பட்டு, தொட்டில் பாட்டு பாடிய பின்னர் அன்னமயில் வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முருகப்பெருமான் வழிபாடு செய்யும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக  கோயில் உள் மண்டபத்தில் பரதநாட்டியம் களை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.



கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் மாலை நேரத்தில் அசுரன்  விநாயகர் உருவத்தில் வேடமடைந்தனர்,  2-ஆம் நாள் நிகழ்வில்  சிங்கம் முகம் பொருத்திய அசுரன் அதனை தொடர்ந்து அரக்கன் பெண் வேடம் அணிந்து ஆட்டம் ஆடி வலம் வரும் நிகழ்வும் இன்று 6-அசுர பொம்மைகளை பக்தர்கள் தலையில் சுமந்து முருகனுடன் சண்டையிடுவதுபோல் ஆட்டம் ஆடி வலம் வருவது. இதில் அன்னமயில் வாகனம் மூலம் முருகர் காட்சி அளித்தார்,.

 



 

இதில் முக்கிய நிகழ்ச்சியான இறுதி நாள் இன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் (18-ந்தேதி) சூரசம்ஹாரம் நிகழ்வு  துவங்க உள்ளது.  சென்னை, திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 



முருகப்பெருமான் தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி காட்சி அளித்து  சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல்கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி முருகர் வேடம் அணிந்து அரக்கனை கொள்ளும் நிகழ்வு நடைபெறுவதை கண்டுகளித்து பக்தர்கள் முறுகபெருமானை வழிபடுவர். யானை முகம், சிங்க முகம் பெண் முகம் என  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வரும் சூரனை வதம் செய்யும் நிகழ்வில் இறுதி நாளான (6 வது) நாளில் சூரபதுமன் எனும் அரக்கனை முருகப்பெருமான் வேல்கொண்டு அழைத்து வதம் செய்வார்.  19 ஆம் தேதி காலை முருக பெருமானுக்கு வள்ளியுடன் திருகல்யாணம் நிகழ்வு நடைபெற்று விழா நிறைவடையும்.