• ”தெலங்கானாவில் பிஆர்எஸ் - பாஜக கூட்டணி, ஒரு லட்சம் கோடி கொள்ளை” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


நடைபெறும் தெலங்கானா தேர்தல் என்பது  மேட்டுக்குடிகளின் தெலங்கானாவுக்கும், மக்களின் தெலங்கானாவுக்கும் இடையேயான தேர்தல் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.  தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள தெலங்கானாவில் நடைபெறும் தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. மேலும் படிக்க..



  • ஃபோனை ஹேக் செய்து சிக்க வைக்க திட்டம்? பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி எழுதியுள்ள கடிதத்தில், “நேற்றிரவு எனக்கு கிடைக்கப் பெற்ற எச்சரிக்கை குறுந்தகவல் இதில்  இணைக்கப்பட்டுள்ளது, அதில் "உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்து அணுக, அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்களால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது" என வெளிப்படையாகவே கூறியுள்ளது. மேலும் படிக்க..



  • மீனவர்கள் விவகாரம் - மத்திய அமைச்சர் சொன்னது என்ன? - டி.ஆர்.பாலு பேட்டி


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறுவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவரை நேரில் சந்தித்து அளித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை நிறுத்திடவும் கைது செய்யப்படுள்ள மீனவர்களை உடனடியான விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை திரும்ப வழங்கிவும் வலியுறுத்தியும் மத்திய வெளியுறுவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தப் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க..



  • எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஹேக் செய்யப்பட்டதா..? ஆப்பிள் நிறுவனம் பரபரப்பு விளக்கம்


எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் போன்களை மத்திய அரசு ஹேக் செய்ய முயற்சித்ததாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். மேலும் படிக்க..



  • ”முடிந்தால் என் போனை ஹேக் செய்; பிரதமரின் ஆன்மா அதானியிடம் உள்ளது”: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி!


காங்கிரஸ், டிஎம்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்களில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கைகள் வந்ததாகக் கூறியுள்ளனர். அவர்களின் தொலைபேசிகள் மற்றும் மின்னஞ்சல்களை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக கண்டனம் எழுந்தது. எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த கூற்றுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். அப்போது அவர், “முடிந்தால் என் போனை ஹேக் செய், நானே எனது போனை தருகிறேன். எனக்கு எந்த கவலையும் இல்லை. இதற்கெல்லாம் நாங்கள் பணிய மாட்டோம், தொடர்ந்து போராடுவோம்” என்றார். மேலும் படிக்க..



  • மோசமடையும் காற்றின் தரம்! - 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..


பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க..