தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறுவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவரை நேரில் சந்தித்து அளித்தார். 


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவதை நிறுத்திடவும் கைது செய்யப்படுள்ள மீனவர்களை உடனடியான விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகளை திரும்ப வழங்கிவும் வலியுறுத்தியும் மத்திய வெளியுறுவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தப் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை என்றும் வலியுறுத்தியுள்ளார்.


 திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்த என்.ஜே. போர் அடங்கிய குழுவினர் ஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோமத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை இன்று (அக்டோபார்,.31) நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினர்.


இந்தச் சந்திப்பிற்கு பிறகு எம்.பி. டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்ததின் விவரம்:


டி.ஆர்.பாலு கூறுகையில்,” மீனவர்வர்கள் பிரச்னை குறித்து முதலமைச்சரின் கடிதம் தங்களது துறைக்கு வந்துவிட்டதாகவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.  இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற காரணத்தினால் கைப்பற்றப்பட்ட 12 படகுகள், தொடர்ந்து கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள். 14 மீனவர்கள். 15 மீனவர்கள் மற்றும் 23 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அங்கே இருக்கும் வழக்கறிஞரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறோம் என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.


இது தொடர் நடவடிக்கையாக இல்லாமல் இந்த கைது நடவடிக்கை மீண்டும் நீடித்து விடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே, அமைச்சர் அவர்கள் உரிய கரிசனத்தோடு இந்தப் பிரச்னையை அணுகுவதாக அறிகிறேன். தொடர்ந்து நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு, மீனவர்களுடைய நலன் காக்கின்ற தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதைத்தவிர 9 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று அங்கே இருக்கின்ற நீதிமன்றம் பல மாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் சொல்லியும் அறிவுறுத்தியும் அந்த படகுகள் இன்னும் விடுவிக்கப்பட வில்லை என்று மீனவர்கள் முறையிட்டார்கள் அது குறித்து விசாரிப்பதாகவும், உடனடியாக அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்  முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்கள்.” என்று தெரிவித்தார்,


தொடர்ந்து இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர். பாலு,” மீனவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்னவென்றால், தொடர்ந்து இதுபோன்று நீடித்து போகக்கூடாது. இந்த முறை இரண்டு அரசுகளின் பேச்சு வார்த்தையின்போது, தொடர் நடவடிக்கைகள் இல்லாமல், தொடர்ந்து நீடிக்காமல் இருப்பதற்கு நீண்டகால முடிவு எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசின் அமைச்சர் வந்த பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.” என்றார்.