ஹாங்காங்கிலிருந்து டெல்லி வந்த AI315 ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தீ:

கடந்த 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்து உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.

 

இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹாங்காங்கிலிருந்து இன்று டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்திருக்கிறது. 

இதையும் படிக்க: School Leave: என்னது? இந்த மாசம் 3 நாள் லீவா? குஷியில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! யார் யாருக்கு, எப்போ?